அரசியல்

பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!

பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய பாஜக அரசின் ஒன்றிய ரயில்வேத்துறை தமிழ்நாட்டுக்கு இழைக்கும் அநீதிகளையும், ரயில்வே துறையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகளையும் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் அம்பலப்படுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில் :-

”பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம்; 1

"2024-25 ஆம் ஆண்டில் புதிய வழித்தடத்திற்கு ரூ.31,458 கோடி ஒதுக்கப்பட்டது. இதில் தெற்கு இரயில்வேக்கு ஒதுக்கப்பட்டதோ வெறும் ரூ.301 கோடிதான். அதாவது ஒரு சதவிகிதம் மட்டுமே.

பாஜக ஆளும் மாநிலங்களுக்கு பல்லாயிரம் கோடி. தமிழ்நாடு, கேரளாவுக்கு பட்டை நாமம்.

பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம்; 2

இந்த ஆண்டு பிரதம மந்திரி கதி சக்தி திட்டத்தின் பெயரில் அறிவிக்கப்பட்ட மொத்த தொகை ரூ.29,995 கோடியாகும். ஆனால் இதே காலத்தில் பிரதமர் கதி சக்தி திட்டத்தின் பெயரிலோ அல்லது வேறு எந்த பெயரிலோ தெற்கு இரயில்வேக்கு எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. நிதியும் தரப்படவில்லை.

பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம்; 3

நிலக்கரியும் இரும்புத்தாதும் ஏற்றிச்செல்லும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு, அவர்கள் ஏற்றி செல்லும் தூரத்தைப் பொறுத்து 15 சதவிகிதம் முதல் 20 சதவிகிதம் வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

ஆனால் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை இல்லை.

இரும்புக்கும், நிலக்கரிக்கும் இருக்கும் மரியாதை கூட மனிதருக்கு இல்லை.

மூத்தோர்களை இவ்வளவு அவமதிக்கும் இன்னொரு தேசம் உலகில் இல்லை.

பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம்; 4

இரயில்வே திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடுகளை முழுமையாக விளக்கும் பிங்க் புத்தகம், பட்ஜெட் நாளன்று வெளியிடப்பட்டது.

பின்னர் கூட்டத்தொடர் முடியும் பொழுது வெளியிடப்பட்டது.

இப்பொழுது வெளியிடுவதே நிறுத்தப்பட்டுவிட்டது.

தரவுகளையும், புள்ளிவிபரங்களையும் மறைப்பதே மக்களை அறியாமையில் வைக்கத்தான்.

பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகம்; 5

தெற்கு இரயில்வே 9,000 காலியிடங்களை நிரப்ப இரயில்வே வாரியத்திடம் அனுமதி கோரியது. ஆனால் 2000 பேர் மட்டுமே தேர்வு செய்ய அனுமதிக்கப்பட்டது. இதில் 600 டிரைவர்களை நிரப்ப அனுமதி கோரப்பட்ட நிலையில், வெறும் 200-க்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது" என்று கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories