அரசியல்

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்கள் விரோத செயல்களில் ஈடுபட்டு வருகிறது. மேலும் மக்களுக்கு தேவையானவற்றை கொடுக்காமல், மக்களை வஞ்சிக்கும் நோக்கில் பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறது. அதோடு பாஜக ஆளாத மாநிலங்களை குறிவைத்தும் நிவாரணம் உள்ளிட்ட நல்ல திட்டங்களை வழங்காமல் ஓரவஞ்சனை காட்டி வருகிறது.

இதற்கு தொடர்ந்து மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகளும் கண்டனம் தெரிவித்து பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தபோதிலும், பாஜக திருந்தவில்லை. இந்த சூழலில்SIR என்று சொல்லப்படும் சிறப்பு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தத்தை தேர்தல் ஆணையம், பாஜக கூட்டணி ஆளும் மாநிலமான பீகாரில் நடத்தியது இந்திய தேர்தல் ஆணையம்.

இதைத்தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்காளர் பட்டியல்படி, லட்ச கணக்கான பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. அதோடு ஒரே முகவரியில் நூற்றுக்கணக்கான மக்கள் வசிப்பதாகவும், அதில் ஒரு சிலரின் தந்தை பெயர், ஏதாவது ஒன்று கொடுக்க வேண்டும் என்று ஆங்கில Alphabetical-ல் இருந்து எழுத்துகளை பதிவு செய்துள்ளனர்.

வாக்காளர் பட்டியல் திருத்தும் என்ற பெயரில் போலியாக பலரையும் சேர்த்ததோடு, இருப்பவர்களையும் நீக்கியுள்ளது தேர்தல் ஆணையம். இந்த முறைகேட்டை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மக்கள் மத்தியில் வெளிக்கொண்டு வந்தார். எனினும் இந்த முறைகேடு குறித்து தேர்தல் ஆணையம் முறையாக பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், தற்போது தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சிறப்பு வாக்காளர் தீவிர திருத்தத்தை மேற்கொள்ளவுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !

=> 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பட்டியல் :-

1. அந்தமான் & நிகோபார்

2. சத்தீஸ்கர்

3. கோவா

4. குஜராத்

5. கேரளா

6. லட்சத்தீவு

7. மத்திய பிரதேசம்

8. புதுச்சேரி

9. ராஜஸ்தான்

10. தமிழ்நாடு

11. உத்தர பிரதேசம்

12. மேற்கு வங்கம்

மேலும்...

* படிவங்கள் அச்சடிப்பு/அதிகாரிகளுக்கு பயிற்சி - அக்டோபர் 28 முதல் நவம்பர் 3 வரை

* வீடு வீடாக கணக்கெடுப்பு - நவம்பர் 4 முதல் டிசம்பர் 4

* வரைவு வாக்காளர் பட்டியல் - டிசம்பர் 9

* ஆட்சேபனை தெரிவிக்க /திருத்தங்கள் கோர - டிசம்பர் 9 முதல் ஜனவரி 8, 2026

* புகார்கள் சரிபார்ப்பு டிசம்பர் 9 முதல் ஜனவரி 31, 2026

* இறுதி வாக்காளர் பட்டியல் - 7 பிப்ரவரி 2026

banner

Related Stories

Related Stories