அரசியல்

"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பீகார் சட்டப்பேரவைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு புதிய வரைவு வாக்காளர் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் ஒட்டுமொத்தமாக 65 முதல் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜகவுக்கு ஆதரவாக இந்த நீக்கம் நடத்தப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதனிடையே வரைவு வாக்காளர் பட்டியலில் பல்வேறு குளறுபடிகள் இருப்பது அம்பலமாகியுள்ளது தேர்தல் ஆணையத்தின் செயல்பாட்டை கேள்விக்குள்ளாகியுள்ளது.

"பீகாரில் வாக்காளர்கள் நீக்கப்பட காரணம் என்ன?" - தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு !

இது குறித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அது விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இறுதி வாக்காளர்கள் பட்டியலில் சுமார் 3.66 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். ஆனால் எதற்காக நீக்கப்பட்டார்கள் என்பதை தேர்தல் ஆணையம் வெளியிடவில்லை என்றும், சம்பந்தபட்ட நபர்களுக்கும் தெரிவிக்கவில்லை என்றும் மனு தாரார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து வாக்காளர்கள் ஏன் நீக்கப்பட்டனர் என்பது குறித்து பதிலளிக்க உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, ஒரு வாரத்தில் இதற்கு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், தேர்தல் என்பது பொதுவான ஜனநாயக நடவடிக்கை, அதில் குழப்பம் எதுவும் இல்லை என்பதை தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories