தமிழக வெற்றிக்கழக தலைவர் நடிகர் விஜய் மாலையில் கரூரில் ரசிகர்களை சந்தித்தார். குறிப்பிட்ட நேரத்தை கடந்து அவர் சம்பவ இடத்துக்கு வருகை தந்த நிலையில், அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்தனர். இதனால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பலர் ஒருவர் மேல் ஒருவரை மிதித்து சென்ற நிலையில், அந்த கூட்ட நெரிசல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியது. தொடர்ந்து ஏராளமானோர் மயக்கமடைந்த நிலையில், அவர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது வரை இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 33 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப் பூர்வமாகி அறிவிக்கப்பட்டுள்ளது. 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள நிலையில், 10க்கும் மேற்பட்டோர் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த சம்பவம் அறிந்ததும்,கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியர், அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் ஆகியோருக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.