அரசியல்

உச்சம் அடைந்த தனி மாநிலக் கோரிக்கை... பாஜக அலுவலகத்தை தாக்கி தீ வைத்த லடாக் பொதுமக்கள் !

உச்சம் அடைந்த தனி மாநிலக் கோரிக்கை... பாஜக அலுவலகத்தை தாக்கி தீ வைத்த லடாக் பொதுமக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அங்கு நிலவிய அரசியல் குழப்பத்தை பயன்படுத்தி, அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இதற்கு அந்த மாநிலத்தை சேர்ந்த பொதுமக்கள் கடும் கண்டனத்தை தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கவேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் தன்னை நிறைவேற்றாமல் ஒன்றிய பாஜக அரசு நீதிமன்ற உத்தரவை புறக்கணித்து வருகிறது. இதனிடையே ம்மு-காஷ்மீரில் இருந்து பிரித்த லடாக் மக்களும் தங்களையும் தனி மாநிலமாக அறிவிக்கவேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இதனை ஒன்றிய அரசு கண்டும் காணாமல் உள்ளது. அதோடு இது குறித்து போராடிய மக்களை தொடர்ந்து கைது செய்தும் வருகிறது.

உச்சம் அடைந்த தனி மாநிலக் கோரிக்கை... பாஜக அலுவலகத்தை தாக்கி தீ வைத்த லடாக் பொதுமக்கள் !

இந்த நிலையில், சுற்றுச் சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த 2 வாரங்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். அவருடன் உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்ற இரண்டு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ளது.

லடாக் பகுதிக்கு தனி மாநில அந்தஸ்து வழங்க வேண்டும், தனி பழங்குடியினர் அந்தஸ்து வழங்கி இந்திய அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையில் லடாக்கை இணைக்க வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது, அங்குள்ள பாஜக அலுவலகத்தின் மீது கல்வீசி பொதுமக்கள் தாக்குதல் நடத்தினர். மேலும் காவல் துறை வாகனம் ஒன்றை போராட்டம் நடத்திய பொதுமக்கள் தீ வைத்ததால் லடாக்கில் பதட்டம் நிலவுகிறது.

banner

Related Stories

Related Stories