அரசியல்

"பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது, இது எனக்கும் பொருந்தும்" - மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு !

"பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது, இது எனக்கும் பொருந்தும்" - மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் மக்கள் நீதி மய்யத்தின் மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள முத்தமிழ் பேரவை அரங்கில் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்துக்கு பின்னர் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, நாட்டின் உயரிய திரைப்பட விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது, மலையாள நடிகர் மோகன்லாலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கேள்விக்கு, அவருக்கு எனது வாழ்த்துக்கள். தனக்கு அந்த விருது கிடைக்கவில்லை என யாரும் ஆதங்கம் படக்கூடாது. நிறைய திறமையானவர்கள் அந்த வரிசையில் நிற்க வேண்டும் என தெரிவித்தார்.

"பார்க்க வரும் கூட்டம் எல்லாம் ஓட்டாக மாறாது, இது எனக்கும் பொருந்தும்" - மநீம தலைவர் கமல்ஹாசன் பேச்சு !

தொடர்ந்து, மக்களுக்கு சேவை செய்ய அரசியலுக்கு வரும் நடிகர்களை அரசியல்வாதியாக பார்க்காமல் சினிமா நடிகரை பார்ப்பதற்கான கூட்டமாக தான் உள்ளதா, விஜய்க்கு முன்னோடியாக அரசியலுக்கு வந்த நீங்கள் இதை எப்படி பார்கிறார்கள் என்ற கேள்விக்கு, என்னை ரசிகர்கள் ஏன் தேடி வந்ததார்கள் என்பதை ரசிகர்களிடம் தான் கேட்க வேண்டும். சினிமாவுக்கு வந்தால் நன்றாக நடி என்பார்கள்,இவனெல்லாம் எப்படி நடிகராக வரப் போகிறான் என நடிக்கும் போதே கூறுவார்கள் என தெரிவித்தார்.

பின்னர் விஜயை பார்க்க வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு, கண்டிப்பாக இந்த கூட்டம் ஓட்டாக மாறாது. அது எல்லா தலைவருக்கும் பொருந்தும், எனக்கும் பொருந்தும், இந்தியாவிலுள்ள அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் பொருந்தும். கூட்டம் சேர்ந்து விட்டால் அது எல்லாம் ஓட்டாக மாறாது என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories