அரசியல்

நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !

நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த நூற்றுக்கு மேற்பட்ட முதலீட்டாளர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை சென்னை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து சிறையிலடைத்தனர்.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் யாதவ் மூன்றாவது முறையாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அக்டோபர் 30 ஆம் தேதி வரை தேவநாதனுக்கு இடைகால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நிதி நிறுவன மோசடி வழக்கு... பாஜக கூட்டணியை சேர்ந்த தேவநாதனுக்கு இடைக்கால ஜாமின் !

அதோடு சொந்த பணமாக 100 கோடி ரூபாயை நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமனறத்தில் டெபாசிட் செய்ய தேவநாதனுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், நீதிபதிகள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் நிதி நிறுவன மோசடி வழக்குகளை விசாரிக்கும் நீதிமனறத்தில் ஆஜராக வேண்டும் என்றும் நிபந்தனை விதித்துள்ளனர்.

அதோடு சொத்துக்களை விற்று முதலீட்டாளர்களுக்கு பணத்தை திரும்ப செலுத்துவது குறுத்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், நீதிமன்ற நிபந்தனைகளை மீறினால் மீண்டும் சரண்டர் ஆகி சிறைக்கு செல்ல வேண்டும் என்றுன் எச்சரிக்கை விடுத்தனர்.

banner

Related Stories

Related Stories