அரசியல்

‘ஓரணியில் தமிழ்நாடு’ : “தன்னுடைய இயலாமையால் விமர்சிக்கிறார் பழனிசாமி” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு!

மண்-மொழி-மானம் காக்க தமிழ்நாட்டின் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களை ஓரணியில் திரட்டியுள்ளோம்! - ஆர்.எஸ்.பாரதி

‘ஓரணியில் தமிழ்நாடு’ : “தன்னுடைய இயலாமையால் விமர்சிக்கிறார் பழனிசாமி” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, துணை பொதுச்செயலாளர் – நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா மற்றும் தலைமைக்கழக நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.

அப்போது அவர்கள் பேசியது வருமாறு:

தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்கவும்; ஒன்றிய அரசால் நடத்தபடுகின்ற கூட்டாட்சி தத்துவத்தின் படுகொலைக்கு எதிரான எதிராகவும்; நீட் தேர்வானாலும், தமிழர்களுடைய பண்பாடு பிரச்சனைகளை சிதைக்கின்ற கீழடி பிரச்சனையாக இருந்தாலும், மாநிலத்திற்கு வரவேண்டிய நிதிபங்கீடாக இருந்தாலும், புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் எல்லா தளங்களிலும் தமிழ்நாட்டின் உரிமைகளை பறிக்கின்ற, காலச்சாரத்தை பறிக்கின்ற, மான உணர்வுகளை சிதைக்கின்ற ஒன்றிய அரசுக்கு எதிராகவும் இதுவரை இந்தியாவில் எந்த அரசியல் கட்சி தலைவரும் எடுக்காத ஒரு முயற்சியை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் “ஓரணியில் தமிழ்நாடு” என்ற பெயரில், தமிழ்நாட்டில் இருக்கின்ற ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று மண், மொழி, மானம் காப்பதற்காக ஓரணியில் வரவேண்டும் என முயற்சியை எடுத்தார்கள்.

அது ஜூலை 1 ஆம் தேதி தொடங்கியது, திமுகவின் 7 லட்சம் தொண்டர்கள் அந்த பணியில் ஈடுபட்டனர்; இந்த 70 நாட்களில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 68,000 வாக்குச்சாவடிகளிலும் சென்று ஓரணியில் தமிழ்நாடு என்ற முழக்கத்தோடு இந்த முன்னெடுப்பின் முதற்கட்டத்தை திமுக வெற்றிகரமாக முடித்துள்ளது.

தமிழ்நாடு முழுக்கவும் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளன.

இரண்டாவது கட்டமாக வருகின்ற செப்டமபர் 15 ஆம் தேதி மண், மொழி, மானம் காக்க வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் இக்குடும்பங்கள் உறுதிமொழியை முன்மொழிய உள்ளன.

அந்த உறுதிமொழிகளை தலைமை கழகத்திற்கு அனுப்பி அவற்றை தொகுத்து, அடுத்த கட்டமாக நமது தலைவர் அவர்கள் 17 ஆம் தேதி கரூரில் நடைபெறவிருக்கின்ற முப்பெரும் விழாவில் அந்த உறுதிமொழியை லட்சக்கணக்கான மக்களின் முன்பாக நிறைவேற்றுவார்கள்.

‘ஓரணியில் தமிழ்நாடு’ : “தன்னுடைய இயலாமையால் விமர்சிக்கிறார் பழனிசாமி” - ஆர்.எஸ்.பாரதி தாக்கு!

அடுத்த கட்டமாக செப். 20, 21 ஆகிய தேதிகளில் திமுக சார்பில் கழக மாவட்ட அளவில் ஓரணியில் தமிழ்நாடு உறுதிமொழியை வழிமொழிந்து தமிழ்நாடு முழுக்க தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளது.

அந்தக் கூட்டங்களில் அரசியல் கட்சிகளை தாண்டி பொதுமக்கள், வணிகர்கள், வர்த்தகர்கள், பெண்கள் என அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு உறுதி மொழியை ஏற்பர்.

‘தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டோம்’ என்ற பிரகடனத்தை தமிழ்நாடு முழக்க கொண்டு செல்வதற்காக ஒவ்வொரு கழக மாவட்டத்திலும் லட்சக் கணக்கான மக்கள் பங்கு பெறும் அளவில் பொதுக்கூட்டம் நடைபெறும்.

இப்படிப்பட்ட ஒரு நிகழ்வினை இந்தியாவில் எந்த ஒரு அரசியல் கட்சியும் செய்தது இல்லை என்ற அளவிற்கு மூன்று கட்டங்களாக, 70 நாட்களுக்கு முன்னால் தொடங்கிய இந்த இயக்கம் பல்வேறு பரிமாணங்களைக் கடந்து, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைவரையும் ஒன்றிணைக்கும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதனை வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். 

இப்படி முயற்சியை இதுவரை இந்திய அரசியலில் எந்த ஒரு அரசியல் கட்சியும் எடுக்கவில்லை என்பது அதன் சிறப்பு.

இவ்வாறு ஆ. இராசா அவர்கள் தெரிவித்த பின்னர், செய்தியாளர்கள் கேள்விகள் எழுப்பினர். அப்போது பின்வரும் முக்கிய செய்திகளைக் கூறினார்:-

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் இதுவரை ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்களை இணைந்துள்ளோம்.

தன்னுடைய இயலாமையால் ‘ஓரணியில் தமிழ்நாடு’ குறித்து எடப்பாடி பழனிசாமி விமர்சிக்கிறார். அதிமுக பாஜகவிடம் மண்டியிட்டு விட்டது. தமிழ்நாட்டையே பாஜகவிடம் அடகு வைக்கத் துடிக்கின்றார்கள்.

banner

Related Stories

Related Stories