அரசியல்

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு... முழு விவரம் உள்ளே !

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு... முழு விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தமிழ்நாட்டின் அனைத்து மாநகரங்கள் மற்றும் மாவட்டங்கள் ஆகியவற்றை உள்ள காவல் நிலையங்களில் சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை குறைத்தல் உடனடியாக நடவடிக்கை எடுத்தல் போன்ற திறன்கள் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டு அதன் அடிப்படையில் சிறந்த காவல் நிலையங்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது.

அதன் படி இந்த ஆண்டு தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் மதுரை எஸ் எஸ் காலனி காவல் நிலையத்திற்கு முதலிடமும், திருப்பூர் வடக்கு காவல் நிலையத்திற்கு 2 ஆம் இடமும், திருத்தணி காவல் நிலையத்திற்கு 3 ஆம் இடம் கிடைத்துள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி அன்று இந்த காவல் நிலையங்களுக்கு விருது வழங்கி சிறப்பித்தார். இந்த நிலையில் மீதம் உள்ள சிறந்த காவல் நிலையங்களில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு... முழு விவரம் உள்ளே !

இந்த பட்டியலில் சென்னை பெருநகர காவல் நிலையங்களில் முத்தையால் பேட்டை, மதுரவாயில், ஐஸ் ஹவுஸ் மற்றும் மடிப்பாக்கம் காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தாம்பரம் காவல் ஆணைய எல்லைக்குட்பட்ட சங்கர் நகர் காவல் நிலையம், ஆவடி காவல் ஆணையத்துக்கு உட்பட்ட எண்ணூர் காவல் நிலையம் ஆகியவை சிறந்த காவல் நிலையங்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அதேபோல் வடக்கு மண்டலத்தில் செங்கல்பட்டு டவுன், காஞ்சிபுரம் தாலுகா, விழுப்புரம் கோட்டகுப்பம், பண்ருட்டி, கச்சிராபாளையம், வேலூர் வடக்கு, போளூர் திருப்பத்தூர் டவுன் மற்றும் வாலாஜா காவல் நிலையங்களும் மேற்கு மாவட்டத்தில் சேலத்தில் ஓமலூர், தர்மபுரி, அரூர் காவல் நிலையம், நாமக்கல் டவுன், கிருஷ்ணகிரி டவுன், கோயம்புத்தூர் பகுதிகளில் மேட்டுப்பாளையம், ஈரோடு தெற்கு, ஊட்டி டவுன் சென்ட்ரல் மற்றும் உடுமலைப்பேட்டை காவல் நிலையங்களும் தேர்வாகியுள்ளன.

அதனை தொடர்ந்து மத்திய மண்டலத்தில் திருச்சியில் மண்ணச்சநல்லூர், புதுக்கோட்டை அறந்தாங்கி, அரியலூர் ஜெயங்கொண்டான், பெரம்பலூர், கரூர் டவுன், தஞ்சாவூர் டவுன் கிழக்கு, நாகை மாவட்டம் வெள்ளிப்பூண்டி மற்றும் சீர்காழி காவல் நிலையங்களும் சிறந்த காவல் நிலையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் சிறந்த காவல் நிலையங்களாக 48 காவல் நிலையங்கள் தேர்வு... முழு விவரம் உள்ளே !

தெற்கு மண்டலத்தில் மதுரை உசிலம்பட்டி டவுன், மல்லாங்கிணறு, திண்டுக்கல் வடக்கு டவுன், கமுதி, கூடலூர் வடக்கு, சிவகங்கை டவுன், முன்னர் பள்ளம், கோவில்பட்டி மேற்கு பாவூர்சத்திரம், மற்றும் இரணியல் காவல் நிலையம் என மொத்தம் தமிழக முழுவதும் 48 காவல் நிலையங்கள் சிறந்த காவல் நிலையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இந்த காவல் நிலையங்களில் பொறுப்பாளர்கள் தமிழ்நாடு காவலர் தினத்தை முன்னிட்டு சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்திற்கு வருகை புரிந்து சான்றிதழ் மற்றும் பரிசுத்தொகைகளை பெற்றுச்செல்லுமாறு டிஜிபி அலுவலகம் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories