அரசியல்

“தமிழன் கங்கையை வெல்வான்! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காரசார பேச்சு!

“உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, எதிர்க்கட்சிகளுக்கு குறைவான தேசபக்தி இருப்பதுபோல கருத்து தெரிவித்தார். ஆனால், நாங்கள் எந்த நிலையிலும் தேசத்தை விட்டுக்கொடுத்ததில்லை.”

“தமிழன் கங்கையை வெல்வான்! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காரசார பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் வடமுனையான ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல், தேர்தல் ஆணையத்தின் வாக்காளர்கள் பட்டியல் திருத்த செயல்பாடுகள், தொகுதி மறுவரையறை, அகமதாபாத் விமான விபத்து உள்ளிட்ட ஏராளமான சிக்கல்கள் அரங்கேறிய நிலையில், நேற்றைய நாள் (ஜூலை 21) நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது.

இத்தொடரில் ஒன்றிய பா.ஜ.க அரசிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பவும், பல்வேறு விவாதங்களை மேற்கொள்ளவும் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி முடிவெடுத்தது.

இந்நிலையில், இன்றைய நாள் (ஜூலை) மக்களவையில் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆப்ரேசன் சிந்தூர் மீதான விவாதத்தின்போது பேசிய தி.மு.க நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி, “இந்தியாவிற்கு அச்சுறுத்தல் வந்தபோது, அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஒன்றிய அரசுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் ஒன்றுகூடினோம். ஆனால், ஒன்றிய அரசினர், எதிர்க்கட்சிகளுக்கு என்றும் எதிராகவே கருத்து தெரிவித்து, வரலாற்றை திரித்து வருகின்றனர்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும்போது, எதிர்க்கட்சிகளுக்கு குறைவான தேசபக்தி இருப்பதுபோல கருத்து தெரிவித்தார். ஆனால், நாங்கள் எந்த நிலையிலும் தேசத்தை விட்டுக்கொடுத்ததில்லை. இந்திய பாதுகாப்புத் துறையை ஆதரித்து, முதன்முதலில் பேரணி நடத்திய கட்சி தி.மு.க, நடத்தியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“தமிழன் கங்கையை வெல்வான்! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காரசார பேச்சு!

ஆப்ரேசன் சிந்தூர் குறித்து விளக்க எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமையிலான குழுவில் நான் இருந்ததற்கு பெருமையடையவில்லை. நாங்கள் அனுப்பப்படாமல் இருந்தாலே, நிம்மதியாக இருந்திருப்போம். காரணம், ஒன்றிய அரசு அமைதியை உண்டாக்கவில்லை. இந்திய மக்களை காப்பாற்றுவதில் ஒன்றிய பா.ஜ.க அரசு தோற்றுவிட்டது.

இந்தியாவில் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல் நடந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு முறையும் ஒன்றிய அரசு அதற்கு தெரிவிக்கிற பதில், “இனி, இதுபோல் நடக்காது!” இத்தனை காலத்தில், ஒன்றிய பா.ஜ.க அரசு கற்றுக்கொண்டது என்ன? பணிவான அணுகுமுறையைகூட நீங்கள் கற்கவில்லை. பணிவாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்.

இந்திய ஜனநாயகத்தில் மக்கள் தான் உச்சபட்ச அதிகாரம் கொண்டவர்கள். அவர்கள்தான், யார் எதிர்க்கட்சியாக இருக்க வேண்டும், யார் நம்மை ஆளவேண்டும் என தீர்மானிக்கக்கூடியவர்கள்.

ஆனால், அவற்றை தவிர்த்துவிட்டு தேர்தல் ஆணையம் தான் மக்கள் பிரதிநிதிகளை தீர்மானிக்கக்கூடியவர்களாக வருவதை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம். அதற்கு துணைப்போகும் வாக்காளர் திருத்த பட்டியல் முறையை எல்லாம் நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.

“தமிழன் கங்கையை வெல்வான்! நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!” : நாடாளுமன்றத்தில் கனிமொழி எம்.பி காரசார பேச்சு!

நாம் அனைவரும் இந்திய ஜனநாயகத்தை பாதுகாக்க வேண்டும். எனவே, அடுத்த நாடாளுமன்ற விவாதம் ‘ஜனநாயகத்தை காப்பது’ மற்றும் ‘தேர்தல் முறை’ குறித்ததாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

ஒவ்வொரு தேர்தலுக்கு முன்பும், பா.ஜ.க.வினருக்கு திடீரென்ற அன்பு தமிழ்நாடு மீது தோன்றும். அதுபோலதான், பிரதமர் மோடியின் தமிழ்நாடு வருகையும் அமைந்தது. ஆனால், சில மாதங்களுக்கு முன்புதான், தமிழரின் பெருமையை பறைசாற்றும் கீழடி தொன்மையை ஒன்றிய பா.ஜ.க.வினர் ஏற்க மறுத்தனர்.

உங்களுக்கு என்றும் நாங்கள் தமிழரின் பெருமையை பற்றி பேசுவதை பொறுத்துக்கொள்ள முடியாது. ஆனால், எங்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “இந்தியாவின் வரலாறு தமிழ்நாட்டிலிருந்து எழுதப்பட வேண்டும்” என திட்டவட்டமாக தெரிவித்தார்.

‘கங்கை கொண்ட சோழபுரம்’ என்ற பெயரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். கங்கையை கொண்டவன் அவன், கங்கையை வென்றவன் அவன்! தமிழன் கங்கையை வெல்லுவான்!” என்றார்.

banner

Related Stories

Related Stories