அரசியல்

“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !

சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் வீடு வீடாகச் சென்று “ஓரணியில் தமிழ்நாடு” இயக்கத்தில் மக்களைச் சேர்க்க நேரடியாக சந்தித்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் “ஓரணியில் தமிழ்நாடு” எனும் பிரச்சார இயக்கத்தை ஜுலை முதல் நாளன்று தொடங்கிவைத்தார்கள். மக்களின் பேராதரவுடன் “ஓரணியில் தமிழ்நாடு இயக்கம்” மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.  

இன்று (3.7.2025) காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் வீடு வீடாகச் சென்று பொதுமக்களைச் சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்தார்.

“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !

எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்று பொதுமக்களிடம் முதலமைச்சர் அவர்கள் ஒரு கேள்வியை முன்வைத்தார்.

அப்பொழுது “தமிழ்நாடும் தமிழ்மொழியும் வளமாக இருந்தால்தானே நாம் நலமாக வாழ முடியும்.  எனவே, தமிழ்நாடும், மொழியும், நமது சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டியது மிக, மிக முக்கியம் என்று அவர்கள் பதிலளித்தார்கள்.  அதனைக் கேட்டதும் முதலமைச்சர் மிகுந்த மகிழ்ச்சியோடு “அதற்காகத்தான் திராவிட முன்னேற்றக் கழகமும் இந்த அரசும் பாடுபடுகிறது” என்று தெரிவித்தார்கள்.  

“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !

மகிழ்ச்சிக் கடலில் மூழ்கிய அந்த மக்களிடம் முதலமைச்சர் அவர்கள் மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவறையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவுத்  தேர்வுகள் முதலியவைகளிலிருந்து  நம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமா ?.  வேண்டாமா ? என்று ஒரு கேள்வியை எழுப்பியதுதான் தாமதம், உடனடியாக அவர்கள் எல்லோரும் சேர்ந்து  அப்படி ஒரு கேள்வியே வேண்டாம்;  நம் இளைஞர்கள்தான் நம் நாட்டின் வருங்காலச் செல்வங்கள், தலைவர்கள், நிபுணர்கள்.  அவர்களை நம்பித்தான் ஒவ்வொரு குடும்பமும் நம் நாடும் இருக்கிறது.

எனவே, அவர்களுடைய எதிர்காலத்தைப் பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருக்கும் உள்ள முக்கிய கடமையாகும் என்று கூறியதைக் கேட்டதும் முதலமைச்சர் அவர்கள், இவர்களிடம் நாம் எதையும் கூறாமலேயே இவர்கள் எல்லாம் நமக்கு வழிகாட்டுவது போல் பதில் கூறி மிகுந்த விழிப்போடு இருப்பதைக் கண்டு நமக்குப் பெருமித உணர்வு தோன்றுகிறது என்று குறிப்பிட்டார்கள்.

அதே போல, டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் முதலமைச்சர்தான் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா?  என்றும், இவையனைத்தும் சாத்தியப்பட – நிலையான ஆட்சியை வழங்கிட திரு.மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டும் முடியும் என்று நம்புகிறீர்களா? என்றும் அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும், தங்கள் குடும்பமும் ஓரணியில் தமிழ்நாடு என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா? என்றும் கேள்விகளை எழுப்பியபோது அங்கிருந்த பொதுமக்கள் எல்லாம் ஆம் ! ஆம் ! என்று ஒரே குரலில் மறு மொழி கூறி, முதலமைச்சர் தொடங்கியுள்ள ஓரணியில் தமிழ்நாடு எனும் இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை, இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம் என்றனர்.  

“நீங்கள் தான் தமிழ்நாட்டை தொடர்ந்து ஆள வேண்டும்” : முதலமைச்சரிடம் நெகிழ்ந்து பேசிய பொதுமக்கள் !

தமிழ்நாட்டை கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சிமிக்க மாநிலமாக –இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக இப்போது மட்டுமல்ல, எப்போதும் நிலையாக விளங்கச் செய்வதற்கு தாங்கள்தான் என்றும் முதலமைச்சராகத் திகழ வேண்டும். தங்களைப் போன்ற தொலைநோக்குப் பார்வையும், கூர்ந்த மதியும் கொண்டுள்ள பேரறிவாளர்கள்தான் தமிழ்நாட்டை என்றும் தொடர்ந்து ஆட்சிபுரிந்திட வேண்டும் என்பது எங்கள் அனைவரிடமும் உள்ள அசைக்க முடியாத ஒரே கருத்தாகும்.

ஓரணியில் தமிழ்நாடு என்னும் ஒரே சிந்தனையில் நாங்கள் அனைவரும் உள்ளோம் என்று அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குரலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களிடம் கூறியது  தமிழ்நாடு முழுவதும் இந்த இயக்கம் பெறப்போகும் வெற்றிக்குக் கட்டியம் கூறுவதாக அமைந்தது.

banner

Related Stories

Related Stories