அரசியல்

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் தமிழ்நாட்டு எம்.பி.-க்கள்... : யார் யார்? - விவரம் உள்ளே!

மாநிலங்களவைக்கு திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் தமிழ்நாட்டு எம்.பி.-க்கள்... : யார் யார்? - விவரம் உள்ளே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் தி.மு.கவை சேர்ந்த எம். சண்முகம், எம்.எம்.அப்துல்லா, பி.வில்சன், அதிமுகவைச் சேர்ந்த என்.சந்திரசேகரன், பா.ம.க அன்புமணி ராமதாஸ் ஆகிய 6 பேரின் பதிவுக்காலம் ஜூலை 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த நிலையில் இந்த 6 இடங்களுக்கு ஜூன் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி இதற்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜூன் 2-ம் தேதி தொடங்கி நேற்று (ஜூன் 09) வரை நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் வழக்கறிஞர் வில்சன், கவிஞர் சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் ஆகியோரும், திமுக கூட்டணி சார்பில் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் தமிழ்நாட்டு எம்.பி.-க்கள்... : யார் யார்? - விவரம் உள்ளே!

மேலும் அதிமுக சார்பில் இன்பதுரை, தனபால், மற்றும் 7 சுயேட்சை வேட்பாளர்கள் உட்பட 13 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த சூழலில் அந்த 13 பேரின் மனுக்கள் மீதான பரிசீலனை இன்று (ஜூன் 10) நடைபெற்றது.

மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகும் தமிழ்நாட்டு எம்.பி.-க்கள்... : யார் யார்? - விவரம் உள்ளே!

இதில் திமுக மற்றும் அதன் கூட்டணி வேட்பாளர்கள், அதிமுக வேட்பாளர்கள் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்ட நிலையில், சுயேட்சை வேட்பாளர்கள் 7 பேரின் வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து திமுக வேட்பாளர்கள் வில்சன், சல்மா, எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகிய 4 பேர் மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகின்றனர்.

அதேபோல் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த இன்பதுரை, தனபால் ஆகியோரும் போட்டியின்றி தேர்வாகின்றனர்.

வேட்பு மனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்ட ஜூன் 12 ஆம் தேதி அன்று மாலை 3 மணிக்கு பிறகு, மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வாகியுள்ள கமல்ஹாசன், வில்சன், சல்மா, சிவலிங்கம் உட்பட 6 பேருக்கும் வெற்றிபெற்றதற்கான சான்றிதழ் வழங்கப்படும்.

banner

Related Stories

Related Stories