அரசியல்

சென்னையில் நடைபெற்ற ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் இந்தி திணிப்பு... நடந்தது என்ன ?

சென்னையில் நடைபெற்ற ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் இந்தி திணிப்பு... நடந்தது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து ஒரே நாடு ஒரே மொழி என்ற கொள்கையைத் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. ஒன்றிய அரசின் திட்டங்கள் அனைத்தையும் இந்தியில் பெயர் வைக்கும் பா.ஜ.க அரசு, பிற மொழிகளைத் தொடர்ந்து புறக்கணித்தே வருகிறது.

இது தவிர ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இந்தியைப் பயன்படுத்தச் சொல்வது, அலுவல் பூர்வக்கடித பரிமாற்றம் போன்றவற்றுக்கு ஆங்கிலத்துக்குப் பதில் இந்தியைப் பயன்படுத்துவது போன்ற செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

சென்னையில் நடைபெற்ற ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வில் இந்தி திணிப்பு... நடந்தது என்ன ?

எப்படியாவது இந்தியைத் திணித்து விட வேண்டும் என பா.ஜ.க கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது சென்னையில் நடைபெறும் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதல் நிலை தேர்வில் இந்தி திணிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் முதல் நிலை தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. தேர்வு சென்னையில் மட்டும் 69 மையங்களில் நடைபெற்றது. அதில் சென்னை மண்ணடியில் உள்ள ஒரு தேர்வு மையத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கான அறிவிப்பு பலகை இந்தியில் மட்டும் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories