அரசியல்

அம்பலப்பட்ட அமலாக்கத்துறையின் அட்டூழியம்! - நடந்தது என்ன?

தமிழ்நாடு அரசை சீண்ட நினைத்து உச்சநீதிமன்றத்தின் கண்டனத்தை பெற்ற அமலாக்கத்துறை!

அம்பலப்பட்ட அமலாக்கத்துறையின் அட்டூழியம்! - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றிய பா.ஜ.க ஆட்சியில், பா.ஜ.க ஆளாத மாநில அரசுகளின் மீதும், பா.ஜ.க சாராத அரசியல் தலைவர்கள் மீதும் அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவிவிட்டு, அச்சுறுத்துவது வழக்கமான நடவடிக்கையாக அமைந்துள்ளது.

அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் திராவிட மாடல் ஆட்சி, மக்களிடம் பெற்றிருக்கிற பெரும் மதிப்பை கெடுக்கும் வகையில், டாஸ்மாக் மீது புகார் அளிக்கப்பட்டு, அதன் வழி தமிழ்நாடு அரசின் நன்மதிப்பை போக்க, பா.ஜ.க முன்னெடுத்த திட்டத்திற்கு தடையிட்டு உத்தரவிட்டுள்ளது உச்சநீதிமன்றம்.

இதன் முழு விவரம் பின்வருமாறு,

2025ஆம் ஆண்டு மார்ச் 6ஆம் தேதி தொடங்கி மார்ச் 8ஆம் தேதி வரை டாஸ்மாக் தலைமையகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

மதுவுக்கு அதிக விலை, டெண்டர் முறைகேடு, லஞ்சம் போன்றவற்றின் மூலமாக 1,000 கோடி ரூபாய்க்கு மேல் பணமோசடி நடந்திருப்பதாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டியது.

அம்பலப்பட்ட அமலாக்கத்துறையின் அட்டூழியம்! - நடந்தது என்ன?

குற்றச்சாட்டுக்கு அடிப்படையாக 2017 முதல் டாஸ்மாக் அதிகாரிகள் மீது பதிவு செய்யப்பட்ட 41 முதல் தகவல் அறிக்கைகளை காரணம் காட்டியது அமலாக்கத்துறை.

டாஸ்மாக் தலைமையகத்தில் எந்த முகாந்திரமும் இன்றி அமலாக்கத்துறை சோதனை நடத்தியதாக டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.

அமலாக்கத்துறையின் சோதனைகள் சரிதான் என்றும் தொடர் சோதனைகளை நடத்தலாம் என்றும் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் தீர்ப்பு அளித்தார்.

சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு அரசு, உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு இன்று (மே 22) விசாரணைக்கு வந்தது.

ஏற்கனவே 46 FIR-கள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நிலுவையில் இருக்கும்போது, ஏன் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

40 லட்சம் ரூபாய்க்கும் மேல் மோசடி நடந்திருந்தால் மட்டுமே அமலாக்கத்துறை தலையிட முடியும் என்கிற நிலையில், 41 FIR-களை ஒன்று சேர்த்து அமலாக்கத்துறை கணக்கு காட்டியதற்கும் உச்சநீதிமன்றம் கண்டனம்.

தனிநபர்களின் மீதான வழக்குகளை கொண்டு ஓர் அரசு நிறுவனத்தில் அமலாக்கத்துறை எப்படி சோதனை நடத்தலாம் என்றும் கேள்வி.

எல்லா எல்லைகளையும் அமலாக்கத்துறை மீறியிருப்பதாக குறிப்பிட்டு, அமலாக்கத்துறை சோதனைகளுக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவு.

banner

Related Stories

Related Stories