அரசியல்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தால் கூடுதலாக ரூ. 5,300 கோடி செலவாகும் : தேர்தல் ஆணையம் கணிப்பு !

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தால் கூடுதலாக ரூ. 5,300 கோடி செலவாகும் : தேர்தல் ஆணையம் கணிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தேர்தல் செலவீனங்களை குறைக்கவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்று ஒன்றிய அரசு வாதங்களை முன்வைத்து வருகிறது. ஆனால், தேர்தல் ஆணையம் தயாரித்துள்ள மதிப்பீட்டின்படி 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்தினால் கூடுதலாக 5,300 கோடி ரூபாய் தேவைப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில் 2029 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலோடு சேர்த்து மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடத்தினால் என்னென்ன கட்டமைப்புகள் தேவை என்று தேர்தல் ஆணையம் மதிப்பீடு ஒன்றை தயாரித்துள்ளது. அதன்படி 48 லட்சம் வாக்கு பதிவு இயந்திரங்கள் தேவை 35 லட்சம் கண்ட்ரோல் யூனிட் தேவை. 34 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் தேவை என்று கூறப்பட்டுள்ளது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தால் கூடுதலாக ரூ. 5,300 கோடி செலவாகும் : தேர்தல் ஆணையம் கணிப்பு !

தற்போது தேர்தல் ஆணையத்திடம் 30 லட்சம் வாக்குப்பதிவு இயந்திரங்களும், 22 லட்சம் கண்ட்ரோல் யூனிட்டுகளும், 24 லட்சம் விவிபேட் இயந்திரங்கள் மட்டுமே உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மட்டுமே 20 லட்சம் பற்றாக்குறை உள்ளது. இவற்றை ஆண்டு முழுதும் பாதுகாப்பதற்கான கட்டமைப்புகளும் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி வாக்குச்சாவடி மையங்களை 15% அளவுக்கு உயர்த்தப்பட வேண்டும். கடந்த தேர்தலில் 10.53 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்ட நிலையில் மேலும் 2 லட்சம் வாக்குச்சாவடிகள் கூடுதலாக தேவைப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வு செய்து வரும் நிலையில் தேர்தல் ஆணையம் இந்த தேர்தல் மதிப்பீட்டை தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

banner

Related Stories

Related Stories