அரசியல்

தென் மாநிலங்கள் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் எச்சரிக்கை !

தென் மாநிலங்கள் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை ஐஐடியில் நடந்த விழாவில் ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கலந்துகொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "இந்த நாட்டிற்கு மிகப்பெரிய பங்களிப்பை நாம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். தென் மாநிலங்கள் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும்.

அப்படி இல்லை என்றால் வட மாநிலத்தை சேர்ந்த அதிகமானோர் இங்கு வர நேரிடும். தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் இந்தியாவிற்கு பெரும் பங்களிப்பை கொடுத்துள்ளோம். நாம் வெளிநாட்டுக்கு செல்வது போல் வட மாநிலத்தோர் இங்கு குடியேற வாய்ப்பு.

தென் மாநிலங்கள் மக்கள் தொகை மேலாண்மையில் கவனமாக இருக்க வேண்டும் - ஆந்திர முதலமைச்சர் எச்சரிக்கை !

நீங்கள் Comfort Zoneக்குள் சென்று விடுகிறீர்கள். கல்யாணம் செய்து கொண்டீர்கள், கணவன் மனைவி நன்றாக சம்பாதிக்கின்றீர்கள். அதன்பின்னர் அதிக குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்கின்றீர்கள்.

அதனால் மக்கள் தொகையில் குறைவான நிலைக்குச் செல்கிறோம். நம்ம நாம் மக்கள் தொகை மேலாண்மையில் சரியாக செய்தால், வரப்போற நாட்களில் இந்தியர்கள் உலகத்தை ஆளுவார்கள்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories