அரசியல்

"தமிழ்நாட்டின் கடன் உயர அதிமுக ஆட்சியே காரணம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !

அதிமுகவினர் ஆட்சியை விட்டு செல்லும்போது 4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி கடன் வைத்து சென்றார்கள் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார்.

"தமிழ்நாட்டின் கடன் உயர அதிமுக ஆட்சியே காரணம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அதிமுகவினர் ஆட்சியை விட்டு செல்லும்போது 4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி கடன் வைத்து சென்றார்கள் என சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சி விகிதம் குறைவாக இருக்கக்கூடிய காலகட்டத்தில், தமிழ்நாடு இரண்டு மடங்காக வளர்ந்து இருப்பது நமது முதலமைச்சரின் அவர்களின் நடவடிக்கையே காரணம்.

இந்தியாவில் இரண்டாவது பொருளாதார மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் பொருளாதாரத்தில் மற்ற மாநிலங்கள் தடுமாறிக் கொண்டிருந்தபோது, தமிழ்நாட்டில் முதலமைச்சர் பொறுப்பேற்றபோது, ஒரு வலுவான கட்டமைப்பு அமைக்கப்பட்டது.

தமிழ்நாடு தற்போது 14.5% வளர்ச்சி பெற முதலமைச்சர் அவர்களின் திட்டங்கள் தான் காரணம்.கடன் வாங்குகிறீர்கள் கடன் வாங்குகிறீர்கள் என கூறுகிறீர்கள், மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் தான் கடன் பெறப்பட்டது. தற்போது 8 லட்சத்து 30 ஆயிரம் கோடி தமிழ்நாடு கடன் வாங்கி இருக்கிறது.

"தமிழ்நாட்டின் கடன் உயர அதிமுக ஆட்சியே காரணம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு விமர்சனம் !

2011-2016 அதிமுக ஆட்சி காலத்தில் தொடக்கத்தில் 2,11,866 கோடி கடன் வாங்கப்பட்டது.

2016-2021 கழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி 4 லட்சத்து 80 ஆயிரத்து 300 கோடி கடன் வைத்து சென்றார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாடு பொருளாதாரத்தில் வளர்ச்சி அடையவில்லை. கடன் வாங்குவது தான் வளர்ச்சி அடைந்தது

திமுக ஆட்சிக்கு வரும்போது கொரோனா நெருக்கடி இருந்தது. எனினும் 93 சதவீதம் தான் இந்த ஆட்சியில்  கடன் வாங்கி உள்ளோம்,. அதே அதிமுக ஆட்சியில் 128% கடன் வாங்கி இருக்கிறீர்கள்.நீங்கள் கடன் உயர்வுக்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்.

உரிமையை கேட்டதற்காக ஒன்றிய அரசு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு, கல்வித்துறைக்கு நிதி ஒதுக்கவில்லை, மாநில அரசு அந்த நிதியை ஏற்றுக்கொண்டது. வாங்கிய கடன் முறையாகவும் சீரான முறையில் தமிழக மக்களின் வளர்ச்சிக்கும்,சமூக நல திட்டத்திற்காக, மக்களின் திட்டத்திற்காக வாங்கப்பட்டது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories