அரசியல்

அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சனம் !

அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தேசிய கல்விக் கொள்கையை ஏற்றால் மட்டுமே நிதி வழங்கப்படும் என்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அறிவித்துள்ளதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. அதனைத் தொடேன்ற்து ஒன்றிய அரசினை எதிர்த்து இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய சுங்கத்துறை அலுவலகம் அருகில் ஆர்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் அன்பில் மகேஸ் மேடையில் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "57 சதவிகிதம் மக்களால் நேசிக்கப்படுகின்ற முதலமைச்சர் என்ற சிறப்பை பெற்றுள்ளார் நம் முதலமைச்சர். ஒன்றிய அரசின் இந்தித் திணிப்பு குறித்து மக்களிடம் நீதி கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் இன்னொரு மொழி போருக்கு நாம் தயாராகி வருகிறோம்,

மும்மொழி கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் நிதி வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சர் கூறுகிறார். அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பொழுதுபோகவில்லை என அரசியல் சாசனத்தை எழுதவில்லை. பொழுதுபோதவில்லையே என்று மக்களை மனதில் வைத்து எழுதப்பட்ட அரசியல் சாசனம் அது. ஒரு நாளையில் 18 மணி நேரம் செலவழித்து அரசியல் சாசனத்தை எழுதினார் அண்ணல் அம்பேத்கர். அந்த அரசியல் சாசனத்தில் மும்மொழி கொள்கையை பற்றி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது ?

அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் என்பதுதான் பாஜகவின் நோக்கம் - அமைச்சர் அன்பில் மகேஸ் விமர்சனம் !

தேசிய கல்விக் கொள்கைக்கும், சமக்ர சிக்ஷா அபியான் திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. கண்ணாடியை திருப்பினால்தான் ஆட்டோ ஓடும் என்கிறார்கள் ஒன்றிய அரசாங்கத்தினர். ASER அறிக்கை என்பதே பா.ஜ.க'வின் அஜெண்டாதான். அரசுப் பள்ளிகளை மூட வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கம்.

மும்மொழிக் கொள்கைக்காக தனி ஆளாக போராடுகிறோம் என்கிறார் ஒருவர். நீங்கள் தனி ஆளாக போராடவில்லை, தனித்து விடப்பட்டதால் தனித்து போராடுகிறீர்கள். பாஜகவின் மாநிலத் தலைவர் ஒருவர் 6 மாசம் வெளிநாடு சென்று Course Of Koyapals-ஐ படித்துவிட்டு வந்திருக்கிறார். வாயை திறந்தால் பொய்… பொய்… பொய்.. தமிழ்நாட்டுக்கு 20151 கோடி ரூபாய் தராமல் இருக்கிறார்கள். இன்று நாங்கள் கேட்கிறோம் இது உங்கள் அப்பன் வீட்டு பணமா? 40 லட்சம் பிள்ளைகளின் எதிர்காலம் இதில் உள்ளது,

தர்மேந்திரா பிரதான் தேசிய கல்விக் கொள்கையை ஒற்றுக்கொள்கிறோம் என எழுதி கொடுங்கள் என சொல்கிறார். நீங்கள் இந்தியாவில் யாரை வேண்டுமானாலும் ஏமாற்றலாம், ஆனால் இங்கு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களை ஏமாற்ற ஒருவன் பிறந்து தான் வர வேண்டும். ஒட்டுமொத்த இந்தியாவிலேயே மொழிக்காக உயிர் தியாகம் செய்த மாநிலம் தமிழ்நாடு தான். 43 லட்சம் அரசு பிள்ளைகளுக்காக தான் இந்த பணத்தை நாம் கேட்கிறோம், இதற்கு அனைவரும் சேர்ந்து ஒத்துழைப்பு தர வேண்டும்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories