அரசியல்

இலங்கை கடற்படை அட்டூழியம் - 40 நாட்களில் 77 கைதுகள் : மீனவர்கள் சிக்கல் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு!

“மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தல்.

இலங்கை கடற்படை அட்டூழியம் - 40 நாட்களில் 77 கைதுகள் : மீனவர்கள் சிக்கல் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவின் மற்ற எல்லைகளில் ஏற்படுகிற பதற்றத்தை விட, இந்தியாவின் தென் முனையான இந்தியப் பெருங்கடல் பகுதியில் இலங்கை கடற்படையினர் ஏற்படுத்துகிற பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

கடல் பகுதியையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து வஞ்சிக்கும் இலங்கை கடற்படையினர், தற்போது இந்திய எல்லைக்குள் புகுந்து மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்துகிற அளவிற்கு நிலை மோசமடைந்துள்ளது.

இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து கடிதம் எழுதியும், அதற்கேற்ற தகுந்த நடவடிக்கைகளை எடுக்காமல் மக்களின் பாதுகாப்பை ஏளனப்படுத்தி வருகிறது ஒன்றிய பா.ஜ.க அரசு.

இலங்கை கடற்படை அட்டூழியம் - 40 நாட்களில் 77 கைதுகள் : மீனவர்கள் சிக்கல் குறித்து மக்களவையில் டி.ஆர்.பாலு!

இந்நிலையில், இது குறித்து இன்றைய (பிப்.11) நாடாளுமன்ற கூட்டத்தில் பேசிய தி.மு.க மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, “இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு 520 கைது சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த ஆண்டு கடந்த 40 நாட்களில் 77 கைது சம்பவங்கள் நடந்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

இலங்கை கடற்படையினரால் கடந்த ஆண்டு 520 கைது சம்பவங்கள் நடந்துள்ளது. இந்த ஆண்டு கடந்த 40 நாட்களில் 77 கைது சம்பவங்கள் நடந்துள்ளது. மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்களை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்” என தெரிவித்தார்.

2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில், ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாடு மீனவர்கள் சிக்கலுக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி அளித்த பா.ஜ.க, ஆட்சியைக் கைப்பற்றி 11 ஆண்டுகளாகியும் மக்களின் வாழ்வாதாரத்தையும், பாதுகாப்பையும் கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கதாய் அமைந்துள்ளது.

banner

Related Stories

Related Stories