ஒன்றிய நிதி நிலை அறிக்கையில் இந்த முறையும் தமிழ்நாட்டுக்கான திட்டங்கள் இல்லாததும், தமிழ்நாடு என்ற பெயர் கூட இடம்பெறாததும் பாசிஸ்ட்டுகளுக்கு தமிழ்நாட்டின் மீது இருக்கின்ற வன்மத்தையும், அவர்களின் மாற்றாந்தாய் மனப்பான்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.”
- ஒன்றிய பட்ஜெட்டிற்கு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வரிவிலக்கு 2 கோடி மக்களுக்கு தான் பொருந்தும், இந்தியாவில் வாழும் 140 கோடி மக்களில் மீதமுள்ள 138 கோடி பேருக்கு என்ன சலுகை வழங்கினார் என்பதை நிதியமைச்சர் விளக்க வேண்டும். ஒன்றிய பா.ஜ.க. அரசு என்பது ஏழை, எளிய அடித்தட்டு மக்களுக்கான அரசு அல்ல என உறுதியாகியுள்ளது.
- ஒன்றிய பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை!
நிதி ஒதுக்கீட்டில் மீண்டும் மீண்டும் தமிழ்நாட்டை புறக்கணிக்க, புறக்கணிக்க தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் பாசிஸ்ட்டுகளை நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள்!
- ஒன்றிய பட்ஜெட் குறித்து, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
பீகார் மாநிலத்திற்கு ஜாக்பாட் அடித்த அளவிற்கு 5 திட்டங்களுக்கு அதிக அளவில் நிதி ஒதுக்கிய ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், திருக்குறளை மட்டும் படித்துவிட்டு தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களை புறக்கணித்திருக்கிறார்.
- ஒன்றிய பட்ஜெட் குறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை!
ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை, தொடர்ந்து பொய்யாக வெளியிடுவதை தன்னுடைய வாழ்நாள் சாதனைகளில் ஒன்றாக சீமான் சேர்த்துக் கொள்ள விரும்புகிறார் போலும். பொய் சொல்வதையே தன்னுடைய வாழ்நாள் பிழைப்பாக அவர் வைத்திருக்கிறார்.
- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர் சண்முகம்!
ஒன்றிய அரசு, தங்களுடைய திட்டங்களுக்கான பங்குத் தொகையைக் குறைத்து கொண்டே வருவதால், மாநில அரசின் நிதிச்சுமை அதிகரித்து வருகிறது. குறைவான நிதி வழங்கும் ஒன்றிய அரசு, மானியத் தொகையிலும் பல்வேறு கட்டுப்பாடுகளைத் தமிழ்நாட்டிற்கு மட்டும் விதித்துள்ளது.
- ஒன்றிய பட்ஜெட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
தமிழ்நாடு ஏற்காத கொள்கைகளையும், மொழியையும் திணிப்பதில் காட்டும் ஆர்வத்தில் சிறு துளியையாவது நிதி ஒதுக்கீட்டில் காட்ட வேண்டாமா? பக்கத்துக்குப் பக்கம் தமிழ்நாட்டின் செயல்பாடுகளுக்குப் பாராட்டுப் பத்திரம் வாசிக்கப்படுகிறது. ஆனால், நிதிநிலை அறிக்கையில் மட்டும் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுமையாகப் புறக்கணிக்கப்படுவது ஏன்?
- ஒன்றிய பட்ஜெட் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு தனித்து பல துறைகளில் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு, அதிகப்படியான வேலைவாய்ப்பை உருவாக்கும் மாநிலமாக திகழ்ந்து வருகிறது. இதனால், வடமாநிலத்தவர்கள் தமிழ்நாட்டை தேடி வருகின்றனர். இதன்வழி, ஒட்டுமொத்த நாட்டிற்கும் முன்மாதிரியாக செயல்பட்டு வரும் தமிழ்நாட்டிற்கு சலுகைகள் மறுக்கப்படுவதோடு, வஞ்சிப்புகளும் அதிகரித்து வருகிறது.
- ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது குறித்து தி.மு.க மாநிலங்களை குழுத் தலைவர் திருச்சி சிவா!
வெற்றுச் சொல் அலங்காரங்களும், வஞ்சனையான மேல் பூச்சுகளும் கொண்ட ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையின் மூலமாக இந்திய நாட்டு மக்களை வழக்கம் போல் ஏமாற்றும் பா.ஜ.க.வின் பம்மாத்து நாடகம் தொடர்கிறது.
- ஒன்றிய பட்ஜெட் குறித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
எந்த மாநிலத்தில் தேர்தல் நடைபெறவுள்ளதோ, எங்கு பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் உள்ளதோ அந்த மாநிலத்துக்கு மட்டும்தான் திட்டங்களும் நிதியும் அறிவிக்கப்படும் என்றால் ‘ஒன்றிய’ நிதிநிலை அறிக்கை என இதனை அழைக்க வேண்டிய அவசியம் என்ன?
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
இந்திய நாட்டின் வளர்ச்சியில் தொடர்ந்து முக்கிய பங்காற்றி வரும் முதன்மை மாநிலமான தமிழ்நாட்டிற்கு, ஒன்றிய பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லாதது பெரும் ஏமாற்றம் அளிக்கிறது. தமிழ்நாட்டின் பங்களிப்புகளை அங்கீகரிக்காமல் குறைந்த அளவில் பங்களிப்பு செய்யும் மாநிலங்களே இந்த பட்ஜெட்டில் அதிக ஆதாயம் அடைந்துள்ளன.
- தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!
ஒன்றிய நிதிநிலை அறிக்கை என்றாலே தமிழ்நாட்டைப் பொருத்தவரை ஓரவஞ்சனைதானா? தமிழ்நாடு என்ற பெயர்கூட தொடர்ந்து இடம்பெறுவதில்லையே? எத்தனையோ கோரிக்கைகளை முன்வைத்தோமே, அதில் ஒன்றைக்கூடவா உறுதிசெய்து அறிக்கையில் சேர்க்க மனம் வரவில்லை?
- ஒன்றிய பட்ஜெட்டிற்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
“காப்பீட்டு துறையில் 100 சதவீதம் அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நாட்டின் பொதுத்துறை நிறுவனமான LIC-ஐ அபகரித்து தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கிறது ஒன்றிய அரசு!”
- திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா பேட்டி.
தமிழ்நாட்டிற்கான வளர்ச்சி திட்டங்கள் குறித்த அறிவிப்பு ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. ஒன்றிய அரசின் பட்ஜெட் தமிழ்நாட்டிற்கு ஏமாற்றம் அளிக்கும் வகையில்தான் உள்ளது.
- தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு குற்றச்சாட்டு!
ஒன்றிய பட்ஜெட்டில் தொல்பொருள் ஆராய்ச்சி பற்றி குறிப்பிடும்போது கூட, தமிழ்நாட்டில் இருந்து சென்றிருக்கக்கூடிய நிதியமைச்சர், நம் நாட்டில் 5,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர் இரும்பை பயன்படுத்தினார்கள் என்ற தொன்மையை குறிப்பிடாதது ஏன்?
- தி.மு.க மாநிலங்களை குழுத் தலைவர் திருச்சி சிவா கேள்வி!
தனிநபர் ஆண்டு வருமானமாக ரூ.12 லட்சம் வரை பெருபவர்களுக்கு வரியில்லை என ஒன்றிய அமைச்சர் அறிவித்துவிட்டு, அதன் பிறகு ரூ. 8 லட்சம் முதல் ரூ. 12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு 10% வரி விதிக்கப்படும் என அறிவித்துள்ளார். இதனால், குழப்பத்தை ஏற்படுத்தும் பட்ஜெட்டாக, ஒன்றிய பட்ஜெட் அமைந்துள்ளது. குறிப்பாக, மீண்டும் நடுத்தர மக்கள் மீண்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது உறுதியாகியுள்ளது.
- ஒன்றிய பட்ஜெட் குறித்து, தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்!
இத்தனை ஆண்டுகளாக நாடாளுமன்ற விவகாரங்களில் பங்கேற்றும், இம்முறை தான் முதன்முறையாக பீகார் பட்ஜெட் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதை கண்டிருக்கிறேன்.
- தி.மு.க நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி!
உரை தொடங்கிய அரைமணி நேரத்தில், புதுத் திட்டங்களுக்கென பிகாரின் பெயரை நான்கு முறை நிதி அமைச்சர் சொல்லி விட்டார். ஆனால் நம் நாட்டில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. இந்த வருட முடிவில் பிகாரில் தேர்தல் வருவது குறிப்பிடத்தக்கது.
- ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய பட்ஜெட்டில், 1 வருடமாக போராடி வரும் விவசாயிகளின் குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தும், தங்கம் விலை குறைப்பு, மருத்துவ உபகரணங்கள் விலை குறைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்த அறிவிப்புகள் எதுவும் இடம்பெறவில்லை.
உரை தொடங்கிய அரைமணி நேரத்தில், புதுத் திட்டங்களுக்கென பிகாரின் பெயரை நான்கு முறை நிதி அமைச்சர் சொல்லி விட்டார். ஆனால் நம் நாட்டில் 28 மாநிலங்களும் 8 யூனியன் பிரதேசங்களும் இருக்கின்றன. இந்த வருட முடிவில் பிகாரில் தேர்தல் வருவது குறிப்பிடத்தக்கது.
- ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய்!
’தேசம் என்பது மண் அல்ல, மக்கள்’ என தெலுங்கு கவிதையை தன் பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் மேற்கோள் காட்டிய நிலையில், ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களை புறக்கணித்துவிட்டு, பிகாருக்கு மட்டும் பெரும்பாலான திட்டங்களை அவர் அறிவித்திருப்பது குறித்து விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
ஒன்றிய அரசுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி செய்யும் பீகார் அரசுக்கு திட்டங்களை ஒன்றிய அரசு வாரி வழங்கியுள்ளது. டெல்லி தேர்தலை கருத்தில் கொண்டும் பட்ஜெட் அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
- திமுக மக்களவை குழுத் தலைவர் டி.ஆர்.பாலு விமர்சனம்!
63 ஆண்டுகள் பழமையான வரி நடைமுறைகள் மாற்றயமைக்கப்பட உள்ளன. புதிய வருமான வரி மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.
- நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்!
ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்தாண்டும் தமிழ்நாட்டிற்கு புதிய திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்கம், பேரிடர் கால நிதி உள்ளிட்ட எதற்கும் இந்தாண்டும் ஒன்றிய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படவில்லை.
நடுத்தர வர்க்கத்தினருக்கான வருமான வரி ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக உயர்வு !
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் ஈட்டுவோருக்கு வரி கிடையாது என ஒன்றிய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு!
பிகாருக்கு பல அறிவிப்புகள் வந்துள்ளது. இந்த ஆண்டு பிற்பகுதியில் அங்கு தேர்தல் வருவதால் இந்த அறிவிப்பு வந்திருக்கிறது. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மற்றொரு தூணாக இருக்கும் ஆந்திரா ஏன் இவ்வளவு கொடூரமாக புறக்கணிக்கப்பட்டிருக்கிறது?
- காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்!
பீகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில், ஒன்றிய பட்ஜெட்டில் அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஒன்றிய பாஜக ஆட்சி நீடிப்பதற்கு நிதிஷ்குமார் ஆதரவு தேவை என்பதால், கடந்த பட்ஜெட்டிலும் 60 ஆயிரம் கோடிக்கும் அதிகமான நிதியினை பீகாருக்கு ஒன்றிய அரசு ஒதுக்கியது. தற்போதும் நிதிஷ்குமார் பாஜகவிடம் முரண்பட்டுள்ள நிலையில், இந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு!
பீகாருக்கு அதிக திட்டங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், இது பீகார் மாநில பட்ஜெட்டா என இணையதளத்தில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகளுக்கான புதிய திட்டம், தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை பயிலகம் தொடக்கம், பாட்னா விமான நிலையம் விரிவாக்கம், பசுமை விமான நிலையம் தொடக்கம் உள்ளிட்ட திட்டங்கள் பீகாருக்கு மட்டும் ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாஜக கூட்டணி மாநிலமான பீகாரில், இந்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு திட்டங்களை ஒன்றிய பட்ஜெட்டில் அறிவித்துள்ளது பாஜக.
நாடாளுமன்றத்தில் 2025-26 ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட் உரையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடங்கிய நிலையில், நாட்டின் முக்கிய பிரச்னைகளை விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கமிட்டு ஒட்டுமொத்தமாக வெளிநடப்பு!
2025 - 2026ஆம் ஆண்டுக்கான ஒன்றிய பட்ஜெட்டை இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்!
நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 8-வது முறையாக பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்கிறார்.