அரசியல்

“எஜமான் மோடியின் அரசை சீண்டியதால் திமுக மீது பாயும் பழனிசாமி...” - அமைச்சர் ஐ.பெரியசாமி நெத்தியடி!

“எஜமான் மோடியின் அரசை சீண்டியதால் திமுக மீது பாயும் பழனிசாமி...” - அமைச்சர் ஐ.பெரியசாமி நெத்தியடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே, அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வதந்தியை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. எனினும் இதுபோன்ற போலி விஷயங்களை முறியடித்து, மக்களாட்சியில் முன்னிலையில் இருக்கிறது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு.

இதுபோன்ற போலி செய்திகளை பரப்புவதில் பாஜக முன்னிலை வகித்து வந்த நிலையில், தற்போது அதனை பின்னுக்கு தள்ளி, முன்னேற துடிக்கிறது அதிமுக. எடப்பாடி பழனிசாமி உண்மையை அறியாமல், பொய்யை மட்டுமே நம்பி பிழைப்பை நடத்திக்கொண்டிருக்கிறார். எவ்வளவுதான் திமுக பதிலடி கொடுத்தாலும், அவதூறு பரப்புவதில் மட்டுமே பழனிசாமி முனைப்புக் காட்டி வருகிறார்.

அந்த வகையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் (MGNREGA) உள்ள 100 நாள் வேலை திட்டப் பயனாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்குமாறும், மீண்டும் அவர்களுக்கு தொடர்ந்து வேலை வழங்குமாறும் திமுக அரசை வலியுறுத்துவதாக அவதூறாக அறிக்கை வெளியிட்டார் பழனிசாமி.

“எஜமான் மோடியின் அரசை சீண்டியதால் திமுக மீது பாயும் பழனிசாமி...” - அமைச்சர் ஐ.பெரியசாமி நெத்தியடி!

இதையடுத்து பழனிசாமியின் அவதூறு அறிக்கைக்கு, நிதி விடுவிக்காத ஒன்றிய அரசை கண்டிக்காமல் மாநில அரசை கண்டிப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையாக பதிலடி கொடுத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் அவதூறு பரப்பியுள்ளார். இந்த சூழலில் பழனிசாமியின் அவதூறுக்கு தற்போது அமைச்சர் ஐ.பெரியசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

இதுக்குறித்து அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவு வருமாறு :

நாள் வேலைத் திட்டப் பயனாளிகளுக்கு 2 மாதங்களாக திமுக அரசு சம்பளம் வழங்கவில்லை என பழனிசாமி சொன்னதற்கு ஒன்றிய அரசு நிதி தராமல் பாகுபாடு காட்டுவதையும், அதற்கு பிரதமருக்கு மாண்புமிகு முதலமைச்சர் எழுதிய கடிதத்தைச் சுட்டிக்காட்டி சரியான பதிலடி கொடுத்த பிறகும், பாஜகவோடு கள்ளக் கூட்டணி வைத்திருக்கும் பழனிசாமி எஜமான் மோடியின் அரசை சீண்டிவிட்டார்களே என மீண்டும் திமுக மீதே பாய்ந்திருக்கிறார்.

“எஜமான் மோடியின் அரசை சீண்டியதால் திமுக மீது பாயும் பழனிசாமி...” - அமைச்சர் ஐ.பெரியசாமி நெத்தியடி!

பழனிசாமி குறிப்பிடும் ‘மேலே இருப்பவனைத்’ தமிழ்நாட்டின் உரிமைக்காக எதிர்த்து குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறது திமுக அரசு. பேரிடர் நிதி தொடங்கி GST வரை தமிழ்நாட்டுக்கான நிதியைப் பெறுவதில் உரக்கவே குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். சிபிஐ, அமலாக்கத் துறை, வருமானவரித் துறைக்கு எல்லாம் பயந்து "மேலே இருக்கிறவன் பார்த்துப்பான்" என அஞ்சி நடுங்கும் கோழை பழனிசாமிகள் அல்ல நாங்கள்!

அதிமுகவை பாஜகவிடம் அடிமை சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட பழனிசாமி, இப்போது கூட ஒன்றிய அரசைக் கண்டிக்காமல் திமுகவை மட்டுமே விமர்சிக்கிறார். ஒன்றிய அரசு தர வேண்டிய நிதியைக்கூட திமுக அரசு தரவில்லை என்று தரம் கெட்ட விமர்சனத்தை எல்லாம் டெல்லி கைகாட்டும் போது தஞ்சாவூர் பொம்மையாக ஆடிய ஒரு பொம்மை ஆட்சியை நடத்திய பழனிசாமி மட்டுமே வைக்க முடியும்.

banner

Related Stories

Related Stories