அரசியல்

அருந்ததியினர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய தி.மு.க. அரசு - The Hindu நாளேடு புகழாரம் !

அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் அருந்ததியனரின் சமூக மேம்பாடு உயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

அருந்ததியினர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய தி.மு.க. அரசு - The Hindu நாளேடு புகழாரம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

2009-ஆம் ஆண்டில் முத்தமிழறிஞர் கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில், வழங்கப்பட்ட அருந்ததியினருக்கான 3 சதவிகித உள் இட ஒதுக்கீடு சட்டம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தீர்ப்பளித்தது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு உச்சநீதிமன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு வழங்கிய இந்த தீர்ப்பு திராவிட மாடல் ஆட்சியின் திட்டம் பெற்றுள்ள வெற்றிக்கு வழங்கப்பட்டுள்ள மகத்தான பரிசு என்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் சமூக விடுதலைக்கான, சமூக நீதியை நிலைநாட்டும் வகையில் அமைந்துள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அருந்ததியினருக்கு 3 சதவீத இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதன் மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் அருந்ததியனரின் சமூக மேம்பாடு உயர்ந்துள்ளதாக, தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. இது குறித்து the hindu ஆங்கில நாளேடு வெளியிட்டுள்ள கட்டுரையில், 2018-19-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்பு சேர்க்கையில் 107 இடங்கள் மட்டுமே அருந்ததியர் மாணவர்களுக்கு கிடைத்தன. ஆனால் திராவிட மாடல் ஆட்சியில் 193 அருந்ததிய சமூக மாணவர்கள் மருத்துவ கல்லூரிக்கு சென்றிருக்கிறார்கள்.

அருந்ததியினர் வாழ்வில் மறுமலர்ச்சி ஏற்படுத்திய தி.மு.க. அரசு - The Hindu நாளேடு புகழாரம் !

பொறியியல் படிப்புகளில் 2016–17 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் அருந்ததியர் சமூக மாணவர்கள் வெறும் 8.7 விழுக்காடு அளவில்தான் பயன் பெற்று வந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டில் 16 விழுக்காடு பயனைப் பெற்றுள்ளனர். கல்வி மட்டுமின்றி அரசு வேலைவாய்ப்புகளிலும் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவு அருந்ததியின சமூகத்தினர் பயன் அடைந்துள்ளதாக the hindu ஆங்கில நாளேடு குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள அரசு தேர்வுகளிலும் 3 சதவீத இடஒதுக்கீடு மூலம் அருந்ததியினர் சமூகத்தின் பலன் அடைந்துள்ளனர். திமுக அரசு எந்தவொரு சட்டத்தை நிறைவேற்றும் போதும், அதற்குரிய காரணங்களை முறையாக ஆராய்ந்து, தரவுகளைத் தொகுத்து, ஓய்வுபெற்ற நீதிபதிகளைக் கொண்டு குழு அமைத்து, பரிந்துரைகளைப் பெற்று சாமானிய மக்களுக்கு உரிய பயன்களை உண்மையிலேயே அளித்து வருவதால், திமுக அரசின் சட்டம் எப்போதும் வெற்றியையே பெற்று வருவது வரலாறு ஆகியுள்ளதாக the hindu ஆங்கில நாளேடு பாராட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories