அரசியல்

"இது இனியும் தொடர்ந்தால் ஆளுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் கோவி செழியன் எச்சரிக்கை !

ஆளுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கோவி செழியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"இது இனியும் தொடர்ந்தால் ஆளுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் கோவி செழியன் எச்சரிக்கை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புதுக்கோட்டையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க வருகை தந்த தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் புதுக்கோட்டை ரோஜா இல்லம் என்ற விருந்தினர் மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசிய அவர், "பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை நியமிக்க கூடிய தேடுதல் குழுவில் மூன்று நபர்களை முறையாக அரசின் விதிப்படியும் பல்கலைக்கழகத்தின் விதிப்படியும் நியமித்தோம். தன்னுடைய எல்லை என்ன எதில் தலையிட வேண்டும், எதில் தலையிடக்கூடாது என்ற நிலை தெரியாத ஆளுநர் இதனை கண்டித்து இருப்பது ஆளுநர் பொறுப்புக்கு அழகல்ல. யுஜிசி தேர்வு செய்யக்கூடிய உறுப்பினர்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறி நான்காவது உறுப்பினரை எங்கள் தலையில் சுமத்தி உள்ளது ஏற்கத்தக்கதல்ல.

ஒன்றிய அரசோடு பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒன்றுபட்டு இந்தியாவை உருவாக்கி பல்வேறு மாநிலங்களுக்காக குரல் கொடுத்து வருகிறார்.திமுக அரசு அமையும் போதெல்லாம் உயர்கல்வித் துறையில் அக்கறை காட்டிய காரணத்தினால்தான் இன்று வரை உயர்கல்வித் துறையில் இந்தியாவிலேயே முதல் மாநிலம் தமிழ்நாடு என்ற நிலையை எட்டியுள்ளோம்.

"இது இனியும் தொடர்ந்தால் ஆளுநர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும்" - அமைச்சர் கோவி செழியன் எச்சரிக்கை !

இதை சீர்குலைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் ஆளுநர் தொடர்ந்து உயர்கல்வி துறையின் பணியில் குறுக்கிட்டு இடர்பாடு உருவாக்க வேண்டும் என்பதற்காக கருத்து தெரிவித்து வருகிறார். அதனால்தான் ஆளுநர் அறிக்கை மறுப்பு தெரிவித்து, நேற்றைய தினம் ஆளுநர் ஆளுநர் பணியை பார்க்க வேண்டும் அண்ணாமலை பணியை பார்க்க வேண்டாம் என்று கருத்து தெரிவித்தோம். தமிழ்நாடு அரசை பொருத்தவரை ஆளுநரின் குறுக்கீடுகளை அவ்வப்போது அறிக்கையின் மூலமாக நாங்கள் அனுப்புகின்ற கோப்புகளின் மூலமாகவும் நிரூபித்து வருகிறோம்.

இதன் பிறகு ஆளுநர் தன் நிலையை தொடர்ந்தால் தமிழ்நாடு முதலமைச்சருடன் கலந்து பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்ட ரீதியான அவரது செயல்பாடுகளை வரையறுக்க வேண்டிய கட்டம் தமிழ்நாடு அரசுக்கு வரும். அந்த கட்டத்தை அவர் எட்டாமல் இருப்பது அவர் பதவிக்கு அழகு" என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories