அரசியல்

“ஜனநாயக குரலை ஒடுக்கும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறை” : கனிமொழி என்.வி.என்.சோமு!

“மாநில சுயாட்சி கிடைத்தால் மக்களுக்கு இன்னும் பல திட்டங்களை நம்மால் செய்ய முடியும்.”

“ஜனநாயக குரலை ஒடுக்கும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறை” : கனிமொழி என்.வி.என்.சோமு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை ஒட்டி சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக மருத்துவரணி சார்பில் தியாகராய நகர் சி.ஐ.டி நகரில் சிறப்பு இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

இந்த மருத்துவ முகாமை சென்னை தென்மேற்கு மாவட்ட கழக செயலாளர் மயிலை த.வேலு மற்றும் மாநில மருத்துவ அணி தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி என்.வி.என். சோமு கலந்து கொண்டு தொடங்கி வைத்து தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.

தொடர்ந்து செய்தியாளர்களிடையே பேட்டியளித்த மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி என்.வி.என். சோமு, “பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரை மாநில சுயாட்சியை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மாநில சுயாட்சி கிடைத்தால் மக்களுக்கு இன்னும் பல திட்டங்களை நம்மால் செய்ய முடியும்.

“ஜனநாயக குரலை ஒடுக்கும் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறை” : கனிமொழி என்.வி.என்.சோமு!

இந்தியாவில் சிறந்த மருத்துவ கட்டமைப்பு உள்ள மாநிலம் தமிழ்நாடு, இந்தியாவில் அதி மருத்துவக் கல்லூரி உள்ள மாநிலம் தமிழ்நாடு. ஆனால் இத்தனிச் சிறப்புகளையும், ஜனநாயகத்தின் குரலையும் ஓங்கி ஒடுக்கும் செயலாக தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறை அமைந்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை ஒன்றிய அரசால் கொண்டுவர முடியாது. அப்படி கொண்டு வர இரண்டு அவைகளிலும் பெரும்பான்மை வேண்டும். முதலமைச்சர் கூறியதைப் போல் நாடாளுமன்றத்தில்‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ முறையை எதிர்ப்போம்” என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories