அ.தி.மு.க ஆட்சியில் சென்னையில் அதிகப்படியான மழைப் பெய்த போது, செம்பரம்பாக்கம் ஏரி எவ்வித முன்னறிவிப்பும் இன்றி திறந்து விடப்பட்டது. இதில் சுமார் 240க்கும் மேற்பட்டோர் உயிரிழக்க நேரிட்டது.
நீர் வெளியேற்றத்தால் சென்னையின் பெருவாரியான பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையும் உருவானது. இதனால், சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்ப 10 நாட்களுக்கும் மேல் ஆனது.
இது போன்ற நிலை, தமிழ்நாட்டில் குறிப்பாக சென்னையில் மீண்டும் வராத வகையில், தி.மு.க தலைமையிலான தமிழ்நாடு அரசு வடிகால் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளால் பணிகளை முடுக்கிவிடப்பட்டது. இதனால், நீர் தேக்கம் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும், நடப்பாண்டின் நவம்பர் மாத இறுதியில் ஃபெஞ்சல் புயல் சீற்றத்தின் காரணமாக திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் அதிகப்படியான கனமழை பெய்தது.
மழையால் தென்பெண்ணை ஆற்றின் கொள்ளளவு அதிகரித்தது. இதனையடுத்து சாத்தனூர் அணை திறக்கவேண்டும் என்ற நிலை உருவானது. அதனை அடுத்து, ஆற்றுப்பகுதியை சுற்றியுள்ள மக்களுக்கு 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு, சாத்தனூர் அணை திறக்கப்பட்டது.
இதனை அரசியலாக்க விரும்பிய எதிர்க்கட்சிகள், சாத்தனூர் நீர் திறப்பு குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு சட்டப்பேரவையின் போது முன்மொழிந்தனர்.
இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அ.தி.மு.க ஆட்சியில் தான் முன் அறிவிப்பின்றி செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டு, 240க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆனால், சாத்தனூர் அணை திறக்கப்படுவதற்கு முன்பு, 5 முறை வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது” என விளக்கம் அளித்தார்.
மேலும், “ஒன்றிய அரசின் கணக்கீடுகளிலும் அ.தி.மு.க ஆட்சியில் மழை வெள்ளத்தின் போது அரங்கேறிய அலட்சியம் வெளிப்பட்டுள்ளது“ என முதலமைச்சர் தெரிவித்தார்.