அரசியல்

"சகோதரரே, நாம் எப்பொழுது ஒன்றாக சைக்கிள் ஓட்டப்போகிறோம்?" - ராகுல் கேள்விக்கு முதலமைச்சரின் பதில் என்ன ?

"சகோதரரே, நாம் எப்பொழுது ஒன்றாக சைக்கிள் ஓட்டப்போகிறோம்?" - ராகுல் கேள்விக்கு முதலமைச்சரின் பதில் என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின்போது, கோவையில் இந்தியா கூட்டணி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்துகொண்டனர்.

அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் கலந்துகொண்டார். இந்த கூட்டத்துக்கு ராகுல் காந்தி வரும் வழியில், சாலையில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டி குதித்து அந்த பக்கத்தில் இருந்த ஸ்வீட் கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக ஸ்வீட்ஸ் வாங்கி அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினினிடம் வழங்கினார்.

அப்போது இதுகுறித்து பேசிய ராகுல்காந்தி, "ஸ்டாலின் என் மூத்த சகோதரர். நான் வேறு யாரையும் சகோதரர் என்று அழைப்பதில்லை. அவருக்காக இந்த இனிப்பை வாங்கினேன்"என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் இந்திய அளவில் வைரலானது.

"சகோதரரே, நாம் எப்பொழுது ஒன்றாக சைக்கிள் ஓட்டப்போகிறோம்?" - ராகுல் கேள்விக்கு முதலமைச்சரின் பதில் என்ன ?

இந்த நிலையில், அமெரிக்காவில் தொழில் முதலீடு ஈர்க்க அமெரிக்கா சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணிகளுக்கு இடையே சைக்கிள் ஓட்டி மகிழ்ந்து, அதனை தனது சமூகவலைத்தள பக்கத்திலும் பதிவிட்டிருந்தார். அந்த பதிவை சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, "நாம் எப்பொழுது சென்னையில் ஒன்றாக சைக்கிள் ஓட்டப்போகிறோம்? சகோதரரே !"என்று கேட்டிருந்தார்.

அதற்கு பதிலளித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "சகோதரர் ராகுல் காந்தி, நீங்கள் எப்போது சென்னைக்கு வந்தாலும் நாம் சைக்கிளில் பயணம் செய்யலாம். உங்களுக்கு கொடுக்கவேண்டிய இனிப்புகள் என்னிடம் உள்ளது. சைக்கிள் பயணத்துக்கு பிறகு எனது வீட்டில் இனிப்புடன் கூடிய சுவையான தென்னிந்திய உணவு காத்திருக்கிறது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories