சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அன்பகத்தில் "VOICE OF TN" சார்பில் 2024 : திருடப்பட்ட தீர்ப்பு ? என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகலா பிரபாகர் கலந்துகொண்டார்.
அதில் பேசிய அவர். "கடந்த தேர்தலில் வெறுப்பு மற்றும் வஞ்சகத்தால் நிரப்பப்பட்ட தேர்தல் பிரச்சாரத்தை பார்த்திருக்கிறோம். இந்திய தேர்தல் ஆணையம் மிகவும் புனிதமான அமைப்பாகும். ஆனால் அது ஒரு அரசியலமைப்பு அமைப்பு. இந்திய தேர்தல் ஆணையத்தை நாம் ஏன் நம்பவேண்டும் ? ஏனென்றால் சண்டிகர் மேயர் தேர்தல், சூரத் நாடாளுமன்ற தேர்லை வைத்து நாம் தேர்தல் ஆணையத்தை நம்ப வேண்டும். .
இரண்டாம் கட்ட தேர்தல் குறித்த தகவல்கள் இதுவரை தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்படவில்லை. முழுவதுமாக தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே தேர்தல் ஆணையர்களில் ஒருவர் ராஜினாமா செய்தார். அது ஏனென்று தெரியவில்லை.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கிவிட்டு புதிய தேர்வுக்குழுவை அமைத்து எதிர்கட்சி தலைவரின் கருத்தை தன் கேட்காமல் பிரதமரே தேர்தல் ஆணையர்களை நியமித்தார். இதன்மூலம் தேர்தல் ஆணையத்தின் சுதந்திர தன்மையை நாம் நம்ப வேண்டும்.
39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. ஆனால் அதனிடம் குறைவாக தொகுதிகளை கொண்ட மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஜார்க்கண்ட், அசாம், பீகார், மேற்கு வங்காளம், மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களில் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும்"என்று கூறினார்.