அரசியல்

மஹாராஷ்டிரா சட்டமேலவை தேர்தல் : திண்டாட்டத்தில் ஷிண்டே, அஜித் பவார் - எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு ?

மஹாராஷ்டிரா சட்டமேலவை தேர்தல் : திண்டாட்டத்தில் ஷிண்டே, அஜித் பவார் - எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மஹாராஷ்டிராவில் ஆட்சியில் இருந்த மகா விகாஸ் அகாடி கூட்டணியில் இருந்த சிவசேனாவை சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவுக்கு ஆதரவான எம்.எல்.ஏக்கள் சிலரை தங்கள் அணிக்கு மாற்றி அதன் மூலம் ஆட்சியை பாஜக கவிழ்ந்தது. அதைத் தொடர்ந்து, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்.எல்.ஏக்களை வைத்து பாஜக ஆட்சிக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவே முதல்வராக பொறுப்பேற்றார்.

இந்த கூட்டணியில் துணை முதல்வர் பதவி பாஜகவை சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ்க்கு வழங்கப்பட்டது. அதன்பின்னர் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்துக்கொண்டு அஜித் பவார் அவரது ஆதரவு எம்.எல்.ஏக்களோடு வெளியேறினார். அவருக்கும் துணை முதல்வர் பதவி கொடுத்து கூட்டணியில் பாஜக இணைத்துக்கொண்டது.

எனினும் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மஹாராஷ்டிராவில் அதிக இடங்களை இந்தியா கூட்டணி கைப்பற்றியது. உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் சின்னங்கள் பாஜக கூட்டணியில் சேர்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட்ட நிலையிலும் இந்தியா கூட்டணி இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

மஹாராஷ்டிரா சட்டமேலவை தேர்தல் : திண்டாட்டத்தில் ஷிண்டே, அஜித் பவார் - எம்.எல்.ஏக்களின் ஆதரவு யாருக்கு ?

தொடர்ந்து மகாராஷ்டிரா சட்டமேலவையில் காலியாக இருந்த 4 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அபார வெற்றி பெற்றது. தொடர்ந்து சட்டமேலவையில் காலியாக உள்ள 11 இடங்களுக்கு வரும் 12-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் எம்.எல்.ஏக்கள் வாக்களித்து மேலவை உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பார்கள் என்பதால் ஷிண்டே மற்றும் அஜித் பவார் தரப்பினர் பீதியடைந்துள்ளனர்.

இந்த தேர்தலுக்கு ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அணி இரண்டு வேட்பாளர்களையும்,அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் அணி 2 வேட்பாளர்களையும் நிறுத்தி உள்ளது. ஆனால் இந்த அணிகளில் உள்ள எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து உத்தவ் தாக்கரே மற்றும் சரத் பவார் ஆகியோருடன் பேசி வருவதாக கூறப்படுவதால் தங்கள் எம்.எல்.ஏக்களை தக்க வைக்க ஷிண்டே, அஜித்பவார் ஆகியோர் தீவிரம் காட்டி வருகின்றனர்.

எனினும் இந்த அணிகளில் இருந்து சில எம்.எல்.ஏக்கள் சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே அணி வேட்பாளர்களுக்கே ஆதரவு கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் இந்தியா கூட்டணி தங்கள் எம்.எல்.ஏக்களின் எண்ணிக்கையை விட அதிக வேட்பாளர்களை அறிவித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories