அரசியல்

வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி, களமிறங்கும் பிரியங்கா காந்தி - காங். அறிவிப்பு !

வயநாடு எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார்.

வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி, களமிறங்கும் பிரியங்கா காந்தி - காங். அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் அமேதி மற்றும் வயநாடு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிட்டார். இதில் அமேதியில் பின்னடைவை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி அமோக வெற்றியை பெற்றிருந்தார்.

அதனைத் தொடர்ந்து தற்போது நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து இதில் எந்த தொகுதியின் எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்தது. அது குறித்து விவாதிக்க இன்று டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் இல்லத்தில் சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் கூடினர்.

வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் ராகுல் காந்தி, களமிறங்கும் பிரியங்கா காந்தி - காங். அறிவிப்பு !

அதன் முடிவில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "ராகுல் காந்தி ரேபரேலி, வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் இருந்தும் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், வயநாடு எம்.பி பதவியை ராஜினாமா செய்வார். காலியாகும் அந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார்" என்று அறிவித்தார்.

இதன் மூலம் ராகுல் காந்தி ராஜினமா செய்யவிருக்கும் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவது உறுதியாகியுள்ளது. தற்போது 52 வயதாகும் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ளார். வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததும் அங்கு இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories