அரசியல்

“Exit Poll - மக்களின் மனநிலையா அல்லது மோடி அரசின் மனநிலையா?” : அதிகரிக்கும் குழப்பங்கள் !

2014, 2019 தேர்தல்களை ஒப்பிடும் போது, பா.ஜ.க.விற்கான எதிர்ப்புகள் அதிகரித்திருந்தாலும், கணிப்புகள் மட்டும் பா.ஜ.க.விற்கு சாதகமாக இருப்பது எப்படி? போன்ற கேள்விகள் வலுக்கத் தொடங்கியுள்ளன.

“Exit Poll - மக்களின் மனநிலையா அல்லது மோடி அரசின் மனநிலையா?” : அதிகரிக்கும் குழப்பங்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

கடந்த 10 ஆண்டுகளாக, பா.ஜ.க.வின் வாக்குறுதிகள் இப்போது நிறைவேற்றப்பட்டுவிடும், அப்போது நிறைவேற்றப்பட்டுவிடும் என மக்களால் எதிர்பார்த்து வரப்பட்ட நிலையில், எப்போதும் அது நிறைவேற்றப்படாது என்பதை, தங்களது நடவடிக்கைகளால் உறுதிபடுத்தியுள்ளது பா.ஜ.க.

ஆனால், அவ்வெதையும் மக்களின் பார்வைக்கு விழாதபடி, அமைந்திருக்கிறது Godi மீடியாக்களின் தேர்தலுக்கு பின்னான கருத்துக்கணிப்புகள்.

காரணம், பா.ஜ.க ஆட்சியில் வறுமைகளையும், தற்கொலைகளையும் வேலைவாய்ப்பின்மையும், அநீதிகளையும் தவிர வேறு எவையும் உயர்ந்த பாடில்லை.

எனினும், பா.ஜ.க.வின் வாக்குகள் மட்டும் எவ்வாறு உயரும் என்பது தான், Godi மீடியாக்கள் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்புகளின் மீதான கேள்வி.

இது குறித்து, காங்கிரஸ் கட்சியில் மாநில தலைவர்களான, அஜய் ராய், நானா பட்டோல், ராஜேஷ் தாக்கூர், சுக்விந்தர் சிங் சுகு, கோவிந்த் சிங் தோதாஸ்ரா, டி.கே. சிவகுமார் ஆகியோர் முறையே,

“பா.ஜ.க.வும் அதன் மீடியாவும் மூடிய அறையில் உட்கார்ந்து உருவாக்கியது தான், இந்த கருத்துக்கணிப்புகள். ஆனால், மக்களின் மனநிலை அதற்கு முற்றிலும் எதிர்மறையானது. உத்தரப் பிரதேசத்தில், இந்தியா கூட்டணிக்கு அளவற்ற ஆதரவு கிடைத்திருப்பது தான் உண்மை.”

“Exit Poll - மக்களின் மனநிலையா அல்லது மோடி அரசின் மனநிலையா?” : அதிகரிக்கும் குழப்பங்கள் !

“மகாராஷ்டிர மாநிலத்தில், காங்கிரஸ் மட்டும் 16 இடங்களிலும், இந்தியா கூட்டணி 38 - 40 இடங்களிலும் வெற்றிபெறும். இந்த தேர்தலில், பா.ஜ.க.விற்கு எதிராக போராடியிருப்பது மக்களே.”

“தேர்தல் முடிவுக்கு பின் வெளியான கருத்துக்கணிப்பு முற்றிலும் பொருளற்றவகையில் அமைந்துள்ளது. இந்தியா கூட்டணி, ஜார்க்கண்ட் மாநிலத்தில் 8 - 10 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.”

“இமாச்சல் மாநிலத்தின் 4 மக்களவை தொகுதிகளிலும் கடுமையான போட்டி நிலவினாலும், காங்கிரஸ் கட்சி 2 இடங்களில் முன்னிலை வகிப்பது குறிப்பிடத்தக்கது.”

“நடந்து முடிந்துள்ள மக்களவை தேர்தல் வரலாற்று சிறப்புமிக்க தேர்தல், இதில் மக்களுக்காக மக்களே போராடியுள்ளனர். எனவே, இந்தியா கூட்டணி குறைந்தது 11 முதல் 12 இடங்களில் வெற்றி பெறுவது உறுதி.”

“கர்நாடகத்தில் 3-ல் 2 பங்கு இடங்களில் காங்கிரஸ் வெற்றிபெறும். கட்சி நிர்வாகிகள் அனைவரும் எச்சரிக்கையாக, உறுதியுடன் இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.

கூடுதலாக பா.ஜ.க பல குதர்க்கங்களை உருவாக்கும் பழக்கம் கொண்டமையால், இந்தியா கூட்டணியின் தி.மு.க, காங்கிரஸ், சிபிஐஎம், சிபிஐ, ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், டெல்லியில் அமைந்துள்ள தலைமை தேர்தல் ஆணையத்திற்கு நேரடியாக சென்று, தலைமை தேர்தல் ஆணையர்களை சந்தித்து,

தேர்தல் வாக்கு எண்ணிக்கையை முறையாகவும், நேர்மையாகவும் நடத்தப்பட வேண்டும் என்றும் வலுயுறுத்தல் விடுத்துள்ளனர்.

இதனையடுத்து, இந்தியா கூட்டணி கட்சிகள் மட்டுமல்லாது, மக்களும் “ஊடகங்களால் வெளியிடப்படும் கருத்துக்கணிப்புகள் எல்லாமுறையும் சரியாக அமையுமா என்பது கேள்விக்குறியே,

அதுவும் Godi மீடியாக்களின் கருத்துக்கணிப்பு முற்றிலும் சந்தேகத்திற்குரியதே” என்றும், உண்மையான தேர்தல் முடிவு ஜூன் 4 தான் எனவே, அந்த நாளை எதிர்பார்த்திருக்கிறோம் என்றும் தங்களது கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories