அரசியல்

மோதிக்கொள்ளும் மோடி - அதானி : தோல்வி பயத்தால் வந்த பிரிவா?

அதானி குழுமம் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கிறார் என டெல்லி உயர்நீதிமன்றத்தில் மோடி மீது வழக்கு.

மோதிக்கொள்ளும் மோடி - அதானி : தோல்வி பயத்தால் வந்த பிரிவா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

குஜராத் மாநிலத்தை சேர்ந்த அதானியும், மோடியும் தனி விமானத்தில் செல்லும் அளவிற்கு நண்பர்கள். சர்வாதிகாரத்தையும், முதலாளித்துவத்தையும் இந்திய நாட்டில் நிறுவ கடுமையாக பாடுபடுகிறவர்கள்.

அவ்வகையில், கடந்த 10 ஆண்டுகால மோடி ஆட்சியில் அதானி என கேள்வி எழுப்பினாலே பதவி பறிக்கப்படும் என்ற சூழலும், உலக ஊடகங்கள் மற்றும் அமைப்புகள் - அதானி குழுமத்தை விமர்சித்தாலும் ஒன்றிய பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காது என்ற சூழலும் தொடர்ந்து நடந்து வந்தது.

இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஒன்றிய பா.ஜ.க அரசால் முன்னெடுக்கப்பட்ட சர்வாதிகாரத்தாலும், அதானி குழுமத்தின் முதலாளித்துவ நடவடிக்கைகளாலும், பா.ஜ.க.வும் சரி, அதானி குழுமமும் சரி, மக்களிடமும், முதலீட்டாளர்களிடமும் கடும் அதிருப்தியை சம்பாதித்துள்ளனர்.

அதன் வெளிப்பாடாக, மோடி மோகம் குறைந்து, பா.ஜ.க.வின் பொதுக்கூட்டங்கள் ஈ ஓட்டி வருகின்றன. ஈ ஓட்டும் பொதுக்கூட்டங்களில், மூச்சு முட்ட பொய்களையும், வெறுப்புகளையும் அள்ளித்தெளிக்கும் இடத்தில், பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களான மோடி, அமித் ஷா, நட்டா ஆகியோர் இருந்து வருகின்றனர்.

அவ்வாறு ஈ ஓட்டும் கூட்டத்தில் பேசினால், வெகு மக்களின் பார்வையை எட்ட முடியாது என உணர்ந்த மோடி, தோல்வி பயத்தில் அதானி - அம்பானி போன்ற முதலாளிகள் டெம்போக்களில் கருப்பு பணங்களை அனுப்புகின்றனர் என்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதனால், கடும் சினத்திற்குள்ளான அதானி குழுமம், அதுவரை பா.ஜ.க.விற்கு விசுவாசமாக செயல்பட்டு கொண்டிருந்ததை நிறுத்திக்கொண்டு, மேற்கு வங்கத்தின் சந்தேஷ்காலி விவகாரத்தில் பா.ஜ.க நிகழ்த்திய நாடகத்தை மக்களிடையே போட்டு உடைத்தது.

அதனையடுத்தும், அதானி குழுமம் பெற்று வந்த முதலீடுகளில் சரிவு ஏற்பட்டமையாலும், பா.ஜ.க.வின் அதிகாரம் சரிவை சந்திப்பதாலும், நேரடியாக மோடியின் மீதே டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருக்கிறது அதானி குழுமம்.

அதற்கு அதானி குழுமம் கூறிய காரணம் என்பது, ‘எவ்வித தகுந்த ஆதாரமும் இல்லாமல் பேசியுள்ளார் மோடி. இதற்கான நீதியை அதானி குழுமம் பெறவேண்டும்’ என்பது தான்.

இதனிடையே, காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியும், ‘அதானி ஊழல் குறித்து மோடியே ஒப்புக்கொண்டிவிட்டார். எனவே, சிபிஐ, அமலாக்கத்துறை போன்ற விசாரணைக்குழுக்கள், இது குறித்து தகுந்த விசாரணை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.

இதனால், உலக முதலீட்டாளர்களிடையே குழப்பம் ஏற்பட்டதோடு மட்டுமல்லாமல், மக்களிடையே, ஒன்றிய பா.ஜ.க அரசு நிகழ்த்திய பொருளாதார சீர்கேடுகள் பல, அம்பலப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories