அரசியல்

பாஜக விளம்பரங்களுக்கு தடை : மேல்முறையீடு செய்த பாஜகவின் மனு மீண்டும் தள்ளுபடி - கொல்கத்தா நீதிமன்றம் !

பாஜக விளம்பரங்களுக்கு தடை விதித்த தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய கொல்கத்தா உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் மறுப்பு. பாஜக மனு தள்ளுபடி.

பாஜக விளம்பரங்களுக்கு தடை : மேல்முறையீடு செய்த பாஜகவின் மனு மீண்டும் தள்ளுபடி - கொல்கத்தா நீதிமன்றம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை 5 கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளது. இதனிடையே தேர்தல் பிரசாரத்தில் பாஜகவும், மோடியும் இஸ்லாமியர்கள் குறித்தும் எதிர்க்கட்சிகள் குறித்தும் தொடர்ந்து அவதூறு பரப்பி வெறுப்பு பேச்சையும் பேசி வருகின்றனர். மேலும் தேர்தல் விதிகளை மீறி எதிர்க்கட்சிகள் குறித்தும் மத வெறுப்பை விதைக்கும் வகையிலும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து பாஜக தேர்தல் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது. அந்த விளம்பரத்தில் அக்க ட்சியை பற்றி மட்டுமில்லாமல் அருவருக்கத்தக்க வகையில் தனி மனித தாக்குதலையும் பாஜக மேற்கொண்டது.

பாஜக விளம்பரங்களுக்கு தடை : மேல்முறையீடு செய்த பாஜகவின் மனு மீண்டும் தள்ளுபடி - கொல்கத்தா நீதிமன்றம் !

இந்த தேர்தல் விளம்பரத்துக்கு அனைவரும் கண்டனம் தெரிவித்ததோடு, தங்களை கொச்சையாக விளம்பரம் படுத்திய பாஜக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடமும் திரிணாமுல் காங்கிரஸ் புகார் கொடுத்தது. எனினும் அந்த புகார் மீது தேர்தல் ஆணையம் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் வழக்கம்போல் வேடிக்கை பார்த்தது.

இதையடுத்து இதனை கண்டித்தும், பா.ஜ.கவின் அவதூறு விளம்பரத்திற்கு தடை விதிக்க கோரியும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வழக்கு தொடுத்தது. இந்த வழக்கு மே 20-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, பா.ஜ.கவின் விளம்பரங்கள் இழிவானவை என்றும், எதிர்க்கட்சி வேட்பாளர்கள், கட்சிகள் மீது தனிப்பட்ட தாக்குதல்கள் நடத்தும் நோக்கத்துடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாக நீதிபதி கண்டித்தார்.

பாஜக விளம்பரங்களுக்கு தடை : மேல்முறையீடு செய்த பாஜகவின் மனு மீண்டும் தள்ளுபடி - கொல்கத்தா நீதிமன்றம் !

மேலும் இந்த விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறும் வகையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதி, புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத தேர்தல் ஆணையத்திற்கும் கண்டனமும் தெரிவித்தார். மேலும் பா.ஜ.கவின் விளம்பரத்திற்கு தடைவிதித்தும் உத்தரவிட்டார். ஆனால் கொல்கத்தா உயர்நீதிமன்ற தனி நீதிபதியின் தீர்ப்பை ரத்து செய்ய கோரி கொல்கத்தா உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் முன்பாக பாஜக மேல்முறையீடு செய்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி தெரிவித்ததாவது, தேர்தல் விதிமுறைகளால் விமான நிலையங்களில் உள்ள பிரதமர் உள்ளிட்டவரின் படங்கள் கூட மறைக்கப்பட்டுள்ளன. ஆனால் கொல்கத்தாவில் உயர்நீதிமன்ற நீதிபதி வீட்டின் எதிரே பாஜகவின் விளம்பரங்கள் தற்போதும் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

பின்னர், பொதுமக்களுக்கு இந்த விளம்பரங்களால் என்ன பாதிப்பு ஏற்படும் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் என்றும், இறுதியில் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள்தான் என்றும் தெரிவித்த அவர், அரசியல் கட்சிகள் ஆரோக்கியமான நடைமுறையை தேர்தலில் பின்பற்ற வேண்டும் என்று கூறி பாஜக மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

banner

Related Stories

Related Stories