அரசியல்

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியை கைப்பற்றும் இந்தியா கூட்டணி : தரவுகள் கூறுவது என்ன ?

இந்தியா கூட்டணி எளிதாக ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியை கைப்பற்றும் என சில ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன.

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியை கைப்பற்றும் இந்தியா கூட்டணி : தரவுகள் கூறுவது என்ன ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தற்போது இந்தியாவில் 7 கட்டமான நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், அனைத்து கட்சிகளின் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். ஆரம்பத்தில் 400 இடங்களுக்கு மேல் வெல்வோம் என்று சொன்ன பாஜக தலைவர்கள் தற்போது இந்தியா கூட்டணிக்கு ஆட்சிக்கு வந்தால் யார் பிரதமர் என்ற ரீதியில் பேசி வருகின்றனர்.

ஏற்கனவே விவசாயிகள் போராட்டம், ராஜ்புத் சமூகத்தினரின் போராட்டம் என பாஜகவுக்கு ஆதரவான வடமாநிலங்களில் இந்த முறை பாஜக பெரும் பின்னடைவை சந்திக்கும் என கூறப்பட்டு வருகிறது. இத்தகைய சூழலில் ராமர் கோவில் மட்டுமே தன்னை கரையேற்றும் என பாஜக பெரும் நம்பிக்கை வைத்துள்ளது.

ஆனால், ராமர் கோவில் அமைந்துள்ள அயோத்தியிலேயே இந்த முறை பாஜக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதியல்ல என செய்திகள் வெளியாகியுள்ளது. அயோத்தி பகுதி பைசாபாத் தொகுதியில் அமைந்துள்ளது. இங்கு பாஜக சார்பில் எம்.பி-யாக இருக்கும் லல்லு சிங் 2014 இல் 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். ஆனால் 2019இல் அவர் 60 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றிபெற்றார்.

அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியை கைப்பற்றும் இந்தியா கூட்டணி : தரவுகள் கூறுவது என்ன ?

அந்த தேர்தலில் சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டன. கடந்த 2019 சட்டமன்ற தேர்தலில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் ஆனந்த் சென் 4,63,544 வாக்குகள் பெற்றார். காங்கிரஸ் 50 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகள் பெற்றது. இதனால் இந்த இரண்டு கட்சிகளும் சேர்ந்து போட்டியிட்டால் அது பாஜகவின் வெற்றிவாய்ப்பை கணிசமாக பாதிக்கும்.

அதே நேரம் அங்கு தனித்து களமிறங்கும் பகுஜன் சமாஜ் கட்சி பிராமணர் ஒருவரை வேட்பாளராக அறிவித்துள்ளது. இதனால் பாஜகவுக்கு செல்லும் வாக்குகள் பகுஜன் சமாஜ்க்கு செல்லும் நிலை ஏற்பட்டு அதுவும் பாஜகவுக்கு எதிரான சூழலை ஏற்படுத்தும். தவிர இந்த தொகுதியில் கணிசமாக இருக்கும் ராஜ்புத் சமூகத்தினர் இந்த முறை பாஜகவை தோற்கடிப்போம் என்று சபதம் எடுத்துள்ளனர். ராஜ்புத் சமூகத்தினர் கடந்த இரு தேர்தல்களிலும் பாஜகவுக்கு ஆதரவாகவே வாக்களித்தனர் என தரவுகள் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், 2019 தேர்தலில் சமாஜ்வாதி- காங்கிரஸ் கட்சிக்கு விழுந்த வாக்குகள் மீண்டும் விழுந்தாலே இந்தியா கூட்டணி எளிதாக ராமர் கோவில் அமைந்துள்ள பைசாபாத் தொகுதியை கைப்பற்றும் என சில ஊடகங்கள் கருத்து தெரிவித்துள்ளன. இந்த தொகுதியில் பாஜக தோல்வியை சந்தித்தால் அது அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பது மட்டும் மறுக்க முடியாத உண்மையாகும்.

banner

Related Stories

Related Stories