இந்தியா

”நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது” : களநிலவரத்தை எடுத்து சொல்லும் பரகல பிரபாகர்!

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது என பொருளாதார நிபுணர் பரகல பிரபாகர் கூறியுள்ளார்.

”நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது” : களநிலவரத்தை எடுத்து சொல்லும் பரகல பிரபாகர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

10 ஆண்டுகளாக பா.ஜ.க ஆட்சியில் பொருளாதாரம் கடுமையாகப் பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதன் காரணமாகப் பொதுமக்களின் வாங்கும் சத்தி குறைந்துள்ளது. வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக பா.ஜ.க அரசின் பொருளாதார திட்டங்களைப் பொருளாதார நிபுணர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள். ஆனால் இவர்களின் குரலை ஒன்றிய அரசு காது கொடுத்துக் கேட்பதே இல்லை. ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பிரகலா பிரபாகர் கூட பா.ஜ.கவின் பொருளாதார கொள்கைகளைக் கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் 18 ஆவது மக்களவை தேர்தலுக்கான முதல் 4 கட்ட வாக்குப்பதிவுகள் முடிவடைந்த நிலையில், இந்த தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது என பிரகலா பிரபாகர் கூறியுள்ளார்.

இது குறித்து கூறியுள்ள பொருளாதார நிபுணர் பிரகலா பிரபாகர், ”மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு கடும் எதிர்ப்பு நிலவுகிறது. பொருளாதார முறைகேடு, அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் சமூகத்தில் பிளவு ஏற்படுத்த முயற்சிப்பது அவர்களுக்கு எதிராக திரும்பியுள்ளது.

விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் சிறுபான்மை மக்களின் நம்பிக்கையை பா.ஜ.க இழந்துவிட்டது. நடைபெற்று வரும் மக்களவை தேர்தலில் பா.ஜ.கவுக்கு 200 இடங்கள் கூட கிடைக்காது. வட இந்தியாவில் 80 -95 இடங்களை பா.ஜ.க பறிகொடுக்கும். மகாராஷ்டிரா, பீகாரில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது.” என தெரிவித்துள்ளார்.

பொருளாதார நிபுணர் பிரகலா பிரபாகர் இந்த கருத்து நாடுமுழுவதும் இந்தியா கூட்டணியின் அலை வீசுகிறது என்பதை உறுதி செய்துள்ளது.

banner

Related Stories

Related Stories