அரசியல்

தோல்வி பயத்தால் நீதிமன்றத்தில் பின் வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : விடுவிக்கப்படும் ஊடகவியலாளர்கள்!

குற்றங்கள் நிரூபிக்கப்படாத நிலையிலும், சிறை தண்டனை அனுபவித்த ஊடகவியலாளர்கள், தவறுதலாக கைது நடந்துவிட்டது என கைவிரிக்கும் அரசு.

தோல்வி பயத்தால் நீதிமன்றத்தில் பின் வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : விடுவிக்கப்படும் ஊடகவியலாளர்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

News Click என்கிற தனியார் ஊடகத்தின் நிறுவனர், பிரபிர் புர்கயாஸ்தா, கடந்த அக்டோபர் 3ஆம் நாள் வெளிநாட்டு நிதியுதவி சட்டத்திற்கு புறம்பாக சீனாவிடம் நிதி பெற்றதாக காரணம் கூறி,

சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) 13 (சட்டவிரோத நடவடிக்கை),16 (தீவிரவாதம்),17 (தீவிரவாதத்திற்கு நிதி பெறுதல்),18 (கூட்டு சதி )மற்றும் 22C (குழுவாக குற்றம் செய்தல்) உள்ளிட்ட 5 பிரிவுகளிலும், IPC 153A (பிரிவினை உண்டாக்குதல்) மற்றும் 120B (கூட்டாக குற்றத்தில் ஈடுபடுதல்) ஆகிய குற்ற தண்டனை பிரிவுகளிலும் கைது செய்யப்பட்டார்.

அதன் பின், கடந்த 7 மாதங்களாக சட்டப்படி வழக்கை எதிர்கொண்டு போராடி வந்த பிரபிர் புகயாஸ்தாவிற்கு தொடர்ந்து நீதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தேர்தல் நேரத்தில் பிரபிர் புகயாஸ்தா மீது சாட்டப்பட்ட குற்றம் செல்லுபடியாகாது என தீர்ப்பளித்து, அவரை விடுவித்துள்ளது உச்சநீதிமன்றம்.

இதனால், நீதி கிடைத்துவிட்டது என எண்ணினாலும், 7 மாத சிறை தண்டனை எதற்கு என்ற கேள்வி வலுக்கத்தொடங்கியுள்ளது.

அதற்கான, அதிகாரப்பூர்வ விடை கிடைக்கப்பெறாத நிலையில்
சிலர், News Click நிறுவனம் பா.ஜ.க.வின் பல குற்றங்களை அம்பலப்படுத்தி வந்ததும், பா.ஜ.க.வின் சட்டவிரோத மறைமுக நடவடிக்கைகளை பொதுவெளியில் வெளியிட்டதும் தான் காரணம் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

தோல்வி பயத்தால் நீதிமன்றத்தில் பின் வாங்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு : விடுவிக்கப்படும் ஊடகவியலாளர்கள்!

News Click நிறுவனர், பிரபிர் புகயாஸ்தா கைது செய்யப்பட்டு ஒரே நாளில், காஷ்மீரை சேர்ந்த ஆசிஃப் சுல்தான் என்ற ஊடகவியலாளரும் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஆசிஃப் சுல்தான் என்பவர், அமெரிக்க தேசிய ஊடகவியல் சங்கத்திடம் (National Press Club) விருது பெற்ற ஊடகவியலாளர். மனி உரிமை மீறல்களை எதிர்த்து போராடுபவர்.

காஷ்மீரி மக்கள் ஒன்றிய பா.ஜ.க அரசின் நடவடிக்கைகளால் பெற்று வரும் துன்பத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர். அதற்காகவே, கடந்த மார்ச் ஒன்றாம் நாள், மக்களிடையே கிளர்ச்சியை உண்டாக்குகிறார் என 5 பிரிவுகளில் கைது செய்யப்பட்டவர்.

இவ்வாறு, ஒன்றிய பா.ஜ.க.விற்கு அச்சுறுத்தலாக இருந்த பலர், தேர்தல் நேரத்தில் விடுவிக்கப்படுவதும், பல்வேறு வகையில் கேள்விகளை எழுப்பி வருகின்றன.

இச்சூழலில், இது தேர்தலுக்கான நாடகமா, அல்லது ஆட்சி மாறப்போகிறது என்பதற்கான அறிகுறியா என நெட்டிசன்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories