அரசியல்

வாய் வந்த போக்கிற்கு பேசும் மோடி : தலைகுனிய வைத்த கர்நாடக முதல்வர்!

வளர்ச்சிகளைக் காட்டி தேர்தலில் வெல்ல இயலாது என உணர்ந்த பா.ஜ.க, காங்கிரஸ் மீது சரமாரியான பொய் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது.

வாய் வந்த போக்கிற்கு பேசும் மோடி : தலைகுனிய வைத்த கர்நாடக முதல்வர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இந்தியாவில் வறுமையை மீட்டுவிட்டோம். தேசிய பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளிக்கிறோம். பொருளாதாரத்தில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளோம் என பா.ஜ.க முன்மொழிந்தவை அனைத்தும் பொய்யென அம்பலமான நிலையில்,

தற்போது மதத்தின் பெயரால் மட்டுமே ஆட்சியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற முடிவிற்கு வந்துள்ளது பா.ஜ.க.

பொதுவாகவே, பா.ஜ.க நிர்வாகிகள் மத பிளவுகளை உண்டாக்கி வந்தாலும், இதுவரை பிளவுவாத கருத்துகளை பெருமளவில் வெளிப்படையாக தெரிவிக்காமல் அமைதி காத்து வந்த மோடியின் உண்மை முகம், மக்களவை பிரச்சார கூட்டங்களின் வழி வெளிப்பட்டுள்ளது.

அதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, “அதிக குழந்தைகளை உடைய இஸ்லாமியர்கள், நாட்டின் சொத்துகளை அள்ளிக்கொண்டு செல்வர்” என பொருளற்ற குற்றச்சாட்டை முன்வைத்தார்.

அதற்கு தேசிய அளவில் கடுமையான எதிர்ப்புகள் எழுந்து, இறுதியாக தேர்தல் ஆணையம் மோடியின் வெறுப்பு பேச்சு குறித்து விசாரணை நடத்த முன்வந்துள்ளது.

இதற்கிடையில், மோடி முன்மொழிந்தது பொய் தான் என்று, The Hindu நாளிதழும் தரவுகளை வெளியிட்டு, மோடியின் மூக்கையும், பா.ஜ.க அரசின் மூக்கையும் உடைத்தது.

வாய் வந்த போக்கிற்கு பேசும் மோடி : தலைகுனிய வைத்த கர்நாடக முதல்வர்!

எனினும், பிரிவினைவாத எண்ணம் கொண்ட மோடி, மீண்டும் இஸ்லாமியர்களையும், காங்கிரஸையும் தனது பிரச்சார உரையில் இணைத்து பேசியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி,“கர்நாடக மாநிலத்தின் இடஒதுக்கீட்டு முறையில், OBC-ல் இஸ்லாமியர்கள் இணைக்கப்பட்டு, OBC மக்களின் வேலைவாய்ப்பிற்கு இடையூரு உருவாகியுள்ளதற்கு இஸ்லாமியர்கள் தான் காரணம்” என பேசியுள்ளார்.

அதற்கு உடனடியாக விடையளித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “மோடி அரசுடன் கூட்டணி அமைத்திருக்கும் தேவ கவுடா தான், 1995ஆம் ஆண்டு இஸ்லாமியர்களை OBC பட்டியலில் இணைத்தார்.

ஆனால், அதனை காங்கிரஸ் தான் செய்தது என மோடி தெரிவித்திருக்கிறார்.

காங்கிரஸை கருத்தியலளவில் மோத இயலாது என்பதற்காக, OBC மக்களை காங்கிரஸிற்கு எதிராக திசை திருப்ப போலி முன்மொழிவுகளை பொழிந்து வருகிறார் மோடி.

இவ்வாறு சுயநலத்திற்காக இஸ்லாமியர்களை கொச்சைப்படுத்துகிற மோடி கட்சியுடன், கூட்டணியில் இருக்க தேவ கவுடா இன்றளவும் விரும்புகிறாரா?

முடிவை மக்களுக்கு, உடனடியாக தெளிவுபடுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

ஒரு பெரும்பான்மை சமூகத்தின் வாக்குகளை பெற, சிறுபான்மை சமூகத்தினரை எதிரிகளாக்கி, அப்பட்டமான பழி சுமத்தி வரும் மோடிக்கு, உலகளவில் கண்டனங்கள் குவிந்து வருகின்றன.

banner

Related Stories

Related Stories