அரசியல்

"மருத்துவரிடம் பேச சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு" - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு !

"மருத்துவரிடம் பேச சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு" - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையே அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர். தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், மாநில முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். தற்போது டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சர்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட அனுமதி கோரி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

"மருத்துவரிடம் பேச சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அனுமதி மறுப்பு" - ஆம் ஆத்மி குற்றச்சாட்டு !

அப்போது ஜாமீனுக்காக சர்க்கரை அளவை உயர்த்த சிறையில் இனிப்பு உணவுகளை அரவிந்த் கெஜ்ரிவால் எடுத்துக் கொள்கிறார் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் கூறியிருந்தது. அப்போது அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் சிறையில் உள்ள கெஜ்ரிவால் சர்க்கரை இல்லாத இனிப்புகளை 3 முறை மட்டுமே சாப்பிட்டதாக கூறப்பட்டது.

மேலும், சர்க்கரை இல்லாத தேநீரையே அவர் அருந்தியதாகவும், சர்க்கரை அளவை அதிகரித்து ஜாமீன் பெற முயற்சிப்பதாக அமலாக்கத்தித்துறை கூறுவது அபத்தமானது என்றும் தெரிவிக்கப்பட்டது. அதோடு கெஜ்ரிவால் தமது மருத்துவரிடம் 15 நிமிடங்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலம் பேச முடியவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விசாரணையை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

banner

Related Stories

Related Stories