அரசியல்

மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த பாஜக வேட்பாளர் : எதிர்ப்பால் பகிரங்க மன்னிப்பு கோரினார் !

மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த பாஜக வேட்பாளர் : எதிர்ப்பால் பகிரங்க மன்னிப்பு கோரினார் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. எனினும் அடுத்த கட்ட தேர்தல் நடைபெறவுள்ள தொகுதிகளில்ட் தற்போது தேர்தல் பிரச்சாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் தற்போது தெலங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இங்கு பாஜக வேட்பாளர் ஒருவர் ராம நவமி நிகழ்ச்சியில் பிரசாரம் மேற்கொண்டதோடு, மசூதியை நோக்கி வில் அம்புகளை ஏவுவதுபோல் செய்கை செய்துள்ளது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தின் பாஜக சார்பாக மாதவி லதா போட்டியிடுகிறார்.

இந்த சூழலில் நேற்று முன்தினம் நடைபெற்ற ராம நவமி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர், மதம் சார்ந்த கோஷங்களை எழுப்பினார். மேலும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தின் அருகில் மசூதி ஒன்று இருந்தது. அந்த மசூதியை நோக்கி, பாஜக வேட்பாளர் மாதவி, வில் - அம்பு எய்வது போல் செய்கை காட்டியுள்ளது பெரும் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

மசூதியை நோக்கி அம்பு விடுவது போல சைகை செய்த பாஜக வேட்பாளர் : எதிர்ப்பால் பகிரங்க மன்னிப்பு கோரினார் !

இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி கண்டங்களை எழுப்பியுள்ளது. பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கையும் வலுத்துள்ளது. இந்த நிலையில், அந்த வீடியோவால் யாரின் மனமாவது புண்பட்டு இருந்தால், நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவர்கள் அனைவரையும் மதிக்கிறேன் என்று பாஜக வேட்பாளர் மாதவி கூறியுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து பேசிய AIMIM கட்சி தலைவர் ஒவைசி, "ஐதராபாத் 15 ஆண்டுகளாக அமைதியாக இருக்கிறது.அந்த அமைதியை சீர்குலைக்க முயற்சி நடக்கிறது. அவர்கள் என்ன செய்ய முயற்சி செய்கிறார்கள் என்பதை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் முயற்சியை மக்கள் ஏற்கமாட்டார்கள்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories