அரசியல்

"ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்"- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !

புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல மோடி நடத்திக் கொண்டிருக்கிறார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

"ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்"- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பாளராக வைத்திலிங்கம் அறிவிக்கப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து இன்று நடந்த பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்துகொண்டார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், "புதுச்சேரி வளர்ச்சிக்காக நாம் அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். புதுச்சேரி முழு மாநில அந்தஸ்து பெற்ற மாநிலமாக மாற வேண்டும். காங்கிரஸ் கட்சி புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற்று தருவதில் உறுதியாக உள்ளது.

மோடி சொன்ன வாக்குறுதி ஒன்றைகூட நிறைவேற்றவில்லை. பாஜக தேர்தல் அறிக்கையில் புதுச்சேரிக்கான மாநில அந்தஸ்து குறித்து குறிப்பிடப்படவில்லை. பாஜக மோடி அரசு புதுச்சேரியை ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கிறது. இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தவுடன் புதுச்சேரியில் மூடப்பட்டுள்ள ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பஞ்சாலைகள் திறக்கப்படும்.

அமலாக்கத்துறையை வைத்து மோடி அரசு அமைச்சர் பொன்முடிக்கு தொல்லை கொடுத்து ஜனநாயகத்தை குழிதோண்டி புதைத்துள்ளது. மோடி அரசு தேர்தலை சந்தித்து சட்டமன்ற உறுப்பினர்களை பெறாமல், நாட்டில் 400 க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை பணத்தை வைத்து விலைக்கு வாங்கியுள்ளது.

"ரங்கசாமியை தலையாட்டி பொம்மை போல மோடி நடத்திக் கொண்டிருக்கிறார்"- மல்லிகார்ஜுன கார்கே விமர்சனம் !

ஆளுநர் ரவியை வைத்து தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசுக்கு மோடி தொல்லை கொடுத்து வருகிறார். தமிழ்நாடு அரசின் மக்கள் நலத்திட்டங்களையும், ஆளும் அரசு கோப்புகளை திருப்பி அனுப்பி ஆளுநர் ரவி ஜனநாயக படுகொலை செய்து வருகிறார் ஆளுநர் ரவி. எதிர்கட்சி முதலமைச்சர்களை முடக்குவதுதான் மோடியின் வேலை. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சுதந்திரமாக செயல்படவிடாமல் முடக்கி வைத்துள்ளார் மோடி

புதுச்சேரி மாநில முதலமைச்சர் பார்த்து பரிதாபப்படுகிறேன், அவரை செயல்படவிடாமல் தன் கைக்குள் பிரதமர் வைத்துக்கொண்டு தலையாட்டி பொம்மை போல நடத்திக் கொண்டிருக்கிறார், எப்படி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு தொல்லை கொடுத்தாரோ அதேபோல தற்போது முதல்வர் ரங்கசாமிக்கும் பிரதமர் மோடி தொல்லை கொடுத்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி 2024 ல் ஆட்சிக்கு வந்தால் 30 லட்சத்தும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை கொடுப்போம் என காங்கிரஸ் வாக்குறுதி கொடுத்துள்ளோம்.மகளிருக்கு ஒவ்வொரு ஆண்டும் குடும்பத்தலைவிக்கு ரூ.1 லட்சம் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது. மோடியின் கேரண்டி என்று சொல்லி வருகின்றார் அது மக்கள் மத்தியில் எடுபடவில்லை ஏனெலில் அவரின் எந்த வாக்குறுதியை நிறைவேற்றாததால் மோடியின் கேரண்டி பொய்யானது என்பது தெளிவானது"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories