அரசியல்

வேட்புமனுவில் தில்லுமுல்லு செய்த ஒன்றிய அமைச்சர் : மனைவியின் சொத்து மதிப்பு 500% அதிகரித்ததால் சர்ச்சை !

திருவனந்தபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தவறான தகவலை அளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

வேட்புமனுவில் தில்லுமுல்லு செய்த ஒன்றிய அமைச்சர் : மனைவியின் சொத்து மதிப்பு 500% அதிகரித்ததால் சர்ச்சை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் பாஜகவும் பல்வேறு கட்டங்களாக தங்கள் வேட்பாளர்களை அறிவித்தது. ஆனால், பாஜக அறிவித்த சில வேட்பாளர்கள் போட்டியிட மறுத்து விலகினர். இது பாஜகவுக்கு பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திருவனந்தபுரம் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகர் தவறான தகவலை அளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இவர் தாக்கல் செய்துள்ள சொத்து விவரங்களின் அடிப்படையில் 2016-202 ஆண்டுகளுக்கு இடையே அவருடைய சொத்து மதிப்பு 100% குறைந்துள்ளது. அவர் மனைவியின் சொத்து மதிப்பு 500% அதிகரித்துள்ளது தெரியவந்தது.

வேட்புமனுவில் தில்லுமுல்லு செய்த ஒன்றிய அமைச்சர் : மனைவியின் சொத்து மதிப்பு 500% அதிகரித்ததால் சர்ச்சை !

அவருடைய சொத்து மதிப்பு 100% குறைந்துள்ளது. அசையும் சொத்து 28 கோடியில் இருந்து 9.25 கோடியாக குறைந்துள்ளது. கடன் பூஜ்ஜியம் சதவீதத்திலிருந்து 19.41 கோடியாக உயர்ந்துள்ளது. வருவாய் 28 கோடியில் இருந்து 5 லட்சமாக குறைந்துள்ளது. முதலீடுகள் 15 கோடியில் இருந்து 45 கோடியாக உயர்ந்துள்ளது நகைகளின் மதிப்பு இரண்டு கோடியில் இருந்து மூன்று புள்ளி இரண்டு ஐந்து கோடியாக உயர்ந்துள்ளது என்றும் தேர்தல் பிராமண பத்திரத்தில் தாக்கல் செய்துள்ளார்.

அதேபோன்று 2021-22 ஆம் ஆண்டு வருவாய் 680 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தது. அதனைத் தொடர்ந்து ஒன்றிய அமைச்சர் ராஜிவ் சந்திரசேகரின் சொத்துமதிப்பு குறித்து வருமானவரித்துறை விசாரணை நடத்தும் என்று கூறப்பட்டுளது.

banner

Related Stories

Related Stories