அரசியல்

"மோடி மீண்டும் பிரதமரானால் நாடே மணிப்பூராகி விடும்" - நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம் !

மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் மணிப்பூராக மாறும் என்று பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் கூறியுள்ளார்.

"மோடி மீண்டும் பிரதமரானால் நாடே மணிப்பூராகி விடும்" - நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பொருளாதார நிபுணரும், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவருமான பரகலா பிரபாகர் தொடர்ந்து பாஜகவையும், மோடி அரசையும் விமர்சித்து வருகிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாஜகவின் தேர்தல் பத்திர ஊழல் உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்று விமர்சித்திருந்தார்.

"தேர்தல் பத்திர விவகாரத்தில் பாஜக அரசு ஊழல் செய்துள்ளது. இது இந்தியாவில் மட்டும் அல்ல, உலகிலேயே மிகப்பெரிய ஊழல் என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். வரும் காலத்தில் தேர்தல் பத்திர விவகாரம் இன்று இருப்பதை விட அதிக வேகம் பெறும்.

இது ஒரு முக்கிய பிரச்னையாக மக்கள் புரிந்துகொள்வார்கள். நடக்கவிருக்கும் தேர்தல் இந்தியா கூட்டணி - பாஜக இடையேயானது அல்ல. நடக்கும் தேர்தல் பாஜக - இந்திய மக்களுக்கு இடையேயானது. பாஜக அரசை இந்தியி மக்கள் தண்டிப்பார்கள்"என்று கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும்மணிப்பூராக மாறும் என்று கூறியுள்ளார்.

"மோடி மீண்டும் பிரதமரானால் நாடே மணிப்பூராகி விடும்" - நிர்மலா சீதாராமனின் கணவர் விமர்சனம் !

இது குறித்துப் பேசிய அவர், 2024 மக்களவை தேர்த"ல் முக்கியமானது. இதில் பிரதமர் மோடி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டால், நாடு முழுவதும் லடாக்-மணிப்பூர் போன்ற சூழ்நிலை உருவாகும். இந்தியாவில் மீண்டும் தேர்தலே நடக்காது. இந்திய அரசியலமைப்பு மற்றும் வரைபடமே மாறும்.

அதன் பின்னர் பாகிஸ்தானுக்குச் செல்லுங்கள் என்பது போன்ற வெறுப்பு பேச்சுகள் இதுவரை திரைமறைவில் நடந்தது போல மறைமுகமாக இல்லாமல் மோடியே செங்கோட்டையிலிருந்து பேசுவார். இதனால் நிச்சயம் இந்த ஆட்சியை அகற்றவேண்டும்"என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories