அரசியல்

“‘பாரத் மாதா கீ ஜெய்’ வார்த்தையை உருவாக்கியதே ஒரு இஸ்லாமியர்தான்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு !

'பாரத் மாதா கீ ஜெய்' என்ற வார்த்தை ஒரு இஸ்லாமியர் உருவாக்கியதால், அந்த முழக்கத்தை சங்க பரிவார் இப்போது நிறுத்துமா? என கேரள முதல்வர் பினராயி விஜயன் கேள்வியெழுப்பியுள்ளார்.

“‘பாரத் மாதா கீ ஜெய்’ வார்த்தையை உருவாக்கியதே ஒரு இஸ்லாமியர்தான்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்குகிறது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரசாரம், கூட்டணி உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒன்றிய பாஜக அரசை ஓரங்கட்டுவதற்கு எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளது.

இந்த கூட்டணியானது ஒவ்வொரு மாநிலத்திலும் கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இந்த தேர்தல் இந்தியாவின் தலையெழுத்தை மாற்றப்போவதாக பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், ஒன்றிய பாஜக அரசின் அட்டூழியங்களையும் மக்களுக்கு அனைவரும் வெளிச்சம் போட்டு காட்டி வருகின்றனர். அந்த வகையில் கேரளாவில் முதலமைச்சர் பினராயி விஜயனும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

“‘பாரத் மாதா கீ ஜெய்’ வார்த்தையை உருவாக்கியதே ஒரு இஸ்லாமியர்தான்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு !

அதன்படி நேற்று ஒன்றிய பாஜக அரசு அமல்படுத்திய CAA சட்டத்திற்கு எதிராக CPIM கட்சி ஏற்பாடு செய்த பேரணி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பினராயி விஜயன், ஒன்றிய பாஜக அரசையும் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தங்களையும் கடுமையாக விமர்சித்து வந்தார். இந்த சூழலில் சங்க பரிவார் அமைப்பினர் எந்த கூட்டத்திற்கு சென்றாலும் முழக்கமிடும் 'பாரத் மாதா கி ஜெய்' என்ற வாசகத்தை உருவாக்கியது ஒரு இஸ்லாமியர்தான் என்றார்.

இதுகுறித்து முதலமைச்சர் பினராயி விஜயன் பேசியதாவது, “பல்வேறு நிகழ்ச்சிகளில் சங்க பரிவார் அமைப்பினர், தலைவர்கள் 'பாரத் மாதா கீ ஜெய்' என்று கோஷமிடுகிறார்கள். ஆனால் அந்த வாரத்தையை கண்டறிந்தது யார் என்று அவர்களுக்கு தெரியுமா என்று தெரியவில்லை. 'பாரத் மாதா கீ ஜெய்' என்பதை உருவாக்கியவர் அசிமுல்லா கான் என்ற இஸ்லாமியர்தான்.

“‘பாரத் மாதா கீ ஜெய்’ வார்த்தையை உருவாக்கியதே ஒரு இஸ்லாமியர்தான்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு !

இப்போது ஒரு இஸ்லாமியர் உருவாக்கினால் என்பதால், அந்த முழக்கத்தை சங்க பரிவாரர்கள் பயன்படுத்த மாட்டார்களா? இஸ்லாமியர்களை இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும், பாகிஸ்தானுக்கு அனுப்ப வேண்டும் என்று கூறும் சங்பரிவார்கள் முதலில் இந்த வரலாற்றை புரிந்து கொள்ள வேண்டும்." என்றார்.

'பாரத் மாதா கீ ஜெய்' என்பதை கண்டறிந்த அசிமுல்லா கான் யூசஃபை, 1857-ல் இந்தியாவின் முதல் சுதந்திர போரில் முக்கிய பங்கு வகித்தவர் ஆவார். இந்து-முஸ்லிம் ஒற்றுமையில் நம்பிக்கை கொண்டவரும் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவிற்கு சுதந்திரம் பெற முயன்றவருமான இவர், நானா சாஹிபின் அமைச்சரவையில் பிரதம மந்திரியாகவும் பதவி வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ஆர்.எஸ்.எஸ்., பாஜக, இந்துத்வ அமைப்பு உள்ளிட்ட சங்க பரிவார் அமைப்பினர் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும், பாரத் மாதா கி ஜெய் என்று முழக்கமிடுவர். ஆனால் இஸ்லாமியர்களுக்கு எதிரான செயல்களை செய்து வருகின்றனர். இந்துத்வ கும்பலால் நாடு முழுவதும் தினந்தோறும் இஸ்லாமியர்கள் இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக சிஏஏ சட்டத்தையும் இயற்றி இப்போது மேலும் சிறுபான்மையின மக்களுக்கு துன்பத்தை கொடுத்து வருகிறது ஒன்றிய பாஜக அரசு என்பது கூடுதல் தகவல்.

banner

Related Stories

Related Stories