அரசியல்

தேர்தல் நடைமுறைகளை மீறிய பாஜக : WhatsApp மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பிரசாரம்... எதிர்க்கட்சிகள் கண்டனம் !

பிரதமர் மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தேர்தல் நடைமுறைகளை மீறிய பாஜக : WhatsApp மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பிரசாரம்... எதிர்க்கட்சிகள் கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற மக்களவையின் பதவி காலம் நிறைவடையவுள்ள நிலையில், விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 16-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த இந்திய தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நாடாளுமன்ற தேர்தல் குறித்த விவரங்களை அறிவித்தார்.

அதன்படி இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதற்கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. அதே போல 7-ம் கட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறவுள்ளது.

வாக்குஎண்ணிக்கை வரும் ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நாள் அறிவிக்கப்பட்ட நிலையில், 16-ம் தேதி முதல் தேர்தல் நடைமுறைகள் அமுலுக்கு வந்தது. அதன்படி ஒன்றிய அரசு, மற்றும் மாநில அரசுகளின் கட்டுப்பாடு தேர்தல் ஆணையத்துக்கு வந்துள்ளது.

தேர்தல் நடைமுறைகளை மீறிய பாஜக : WhatsApp மூலம் குறுஞ்செய்தி அனுப்பி பிரசாரம்... எதிர்க்கட்சிகள் கண்டனம் !

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக விக்சித் பாரத் சம்பார்க்’ என்ற பெயரில் பிரதமர் மோடியின் கடிதம் இணைக்கப்பட்ட குறுந்தகவல், வாட்ஸ் அப் வழியாக பலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் ஒன்றிய அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து குடிமக்களிடமிருந்து கருத்துக்களையும் பரிந்துரைகளையும் கூறலாம் என்று கூறப்பட்டுள்ளது. அதோடு அதில் பிரதமர் மோடியின் கடிதம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கருத்துக்களை கூறலாம் என்று சொல்லியிருந்தாலும் அதில், முழுக்க முழுக்க அரசின் திட்டங்கள் குறித்த பிரச்சாரங்களே இடம்பெற்றுள்ளது. இந்திய அரசாங்கத்தின் பெயரில் வந்துள்ள இந்த குறுந்தகவல், பாஜகவின் தேர்தல் பிரச்சார கருவியாக செயல்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வாட்ஸ் அப் கொள்கைப்படி, அரசியல் பரப்புரைகளை தடுப்பதாக கூறும் நிலையில், இதனால் எப்படி வாட்ஸ் அப் நிர்வாகம் அனுமதித்தது என்ற கேள்வியும் எழுப்பப்பட்டுள்ளது. இதன் காரணமாக பல்வேறு தரப்பினரின் இதனை விமர்சித்து வருகின்றனர். மேலும், காங்கிரஸ் கட்சியும் இதற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

banner

Related Stories

Related Stories