அரசியல்

தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் தேய்மான வரலாறு இதுதான் : முழுவிவரம் இங்கே!

தமிழ்நாட்டில் பா.ஜ.க தேய்ந்து வந்த வரலாறு இதுதான்.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் தேய்மான வரலாறு இதுதான் : முழுவிவரம் இங்கே!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் எந்த ஒரு தேர்தல் நடந்தோலும் ’தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்ற இந்த வார்த்தையை கேட்காத மக்களே இருக்க முடியாது. இந்த முழக்கத்திற்கு புகழ் பெற்றவர் தற்போது புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தான். இவர் பா.ஜ.க தலைவராக இருந்த போதுதான் இந்த வார்த்தை நகைச்சுவையானது.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவால் வளரவே முடியாது தன்பதுதான் உண்மை. ஆனால் தமிழ்நாட்டு பா.ஜ.க தலைவர்கள் முதல் பிரதமர் மோடி வரை எல்லோரும் ’தமிழ்நாட்டில் தாமரை மலர்ந்தே தீரும்’ என்றுதான் கூறி வருகிறார்கள். நேற்று முன்தினம் சென்னையில் கூட இதையேதான் கூறினார் பிரதமர் மோடி.

ஆனால் உண்மை என்ன கடந்த சட்டமன்ற தேர்தலிலு கூட படுதோல்வியை சந்தித்தது பா.ஜ.க. ஊராட்சி தேர்தல்களில் கூட வெற்றி பெற முடியாமல் 0 வாக்குகளை வாங்கி பிரபலமடைந்த கட்சிதான் பா.ஜ.க. தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் உண்மையான நிலை இதுதான். இருந்தும் மீசையில் மண் ஒட்டாததுபோல் பிரதமரும் பேசி வருகிறார்.

இந்நிலையில் தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் தேர்தல் வரலாற்றை சற்று திரும்பி பார்ப்போம்:-

1980 இல் பா.ஜ.க உதயமானது. அதில் இருந்து தமிழ்நாட்டில் அதன் நிலைமை இது தான்.

*1984 - நாடாளுமன்றத் தேர்தல் - ஒரு தொகுதியில் போட்டி - தோல்வி.

* 1989 - நாடாளுமன்றத் தேர்தல் - 3 இடத்தில் போட்டி - தோல்வி.

* 1991 - நாடாளுமன்றத் தேர்தல் - 15 இடத்தில் போட்டி - தோல்வி.

* 1996 - நாடாளுமன்றத் தேர்தல் - 37 இடத்தில் போட்டி - அத்தனையிலும் தோல்வி.

* 1996 - சட்டசபைத் தேர்தல் - பத்மநாபபுரம் தொகுதியில் மட்டும் வெற்றி.

* 1998 - நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் சேர்ந்தது - 5 இடத்தில் போட்டி - 3 இடத்தில் வெற்றி.

* 1999 - நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் சேர்ந்தது - 6 இடத்தில் போட்டி - 4 இடத்தில் வெற்றி.

* 2001 - சட்டசபைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 21 இடத்தில் போட்டி - 4 இடத்தில் வெற்றி.

* 2004 - நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 6 இடத்தில் போட்டி - அனைத்திலும் தோல்வி.

தமிழ்நாட்டில் பா.ஜ.கவின் தேய்மான வரலாறு இதுதான் : முழுவிவரம் இங்கே!

* 2006 - சட்டசபைத் தேர்தலில் தனித்து போட்டி - 225 தொகுதியில் போட்டியிட்டு அனைத்திலும் தோல்வி - 221 தொகுதிகளில் டெபாசிட் போனது.

* 2009 - நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணி - அனைத்திலும் படுதோல்வி.

* 2011 - சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையில் சில கட்சிகள் கூட்டணி - அனைத்திலும் படுதோல்வி - 204 தொகுதியில் போட்டியிட்டு 198 இடங்களில் டெபாசிட் போனது.

* 2014 - மோடி பிரதமர் ஆன நாடாளுமன்றத் தேர்தல் - தேமுதிக,பாமக, மதிமுக கூட்டணியில் பாஜக இருந்தது - .... தொகுதியில் போட்டியிட்டு கன்னியாகுமரியில் பொன்னார் மட்டும் வென்றார்.

* 2016 சட்டசபைத் தேர்தலில் பாஜக தலைமையில் சிறு கட்சிகள் கூட்டணி - 180 தொகுதியில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் டெபாசிட் இழந்தது.

* 2019 - நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி - 5 இடங்களில் போட்டியிட்ட பாஜக அனைத்திலும் தோல்வி.

* 2021 - சட்டமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் 20 இடங்களில் போட்டி - 4 இல் மட்டுமே வெற்றி. இதுதான் தமிழக பாஜகவின் தேய்மான வரலாறு. இப்படி ஒரு கட்சியை தமிழ்நாட்டில் வைத்துக் கொண்டு, 'திமுக இனி இருக்காது' என்று பேசுவதற்கு மோடிக்கு உண்மையில் தைரியம் வேண்டும்.

banner

Related Stories

Related Stories