அரசியல்

அம்பானி மகன் திருமணத்திற்காக விமான நிலையத்தை தரம் உயர்த்திய ஒன்றிய அரசு... விமர்சிக்கும் இணையவாசிகள் !

அம்பானியின் மகன் திருமணத்துக்காக ஜாம் நகர் விமான நிலையம், பத்து நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அம்பானி மகன் திருமணத்திற்காக விமான நிலையத்தை தரம் உயர்த்திய ஒன்றிய அரசு... விமர்சிக்கும் இணையவாசிகள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பெட்ரோல், சில்லரை வர்த்தகம், தொலைதொடர்புத்துறை போன்று பல்வேறு துறைகளில் தனது இறக்கைகளை விரித்துள்ள ரிலையன்ஸ் நிறுவனம் உலகத்தின் முக்கிய நிறுவனமாக திகழ்கிறது. அதன் குலம தலைவராக உள்ள முகேஷ் அம்பானி இந்தியாவின் பெரிய பணக்காரராகவும் திகழ்கிறார்.

அதிலும் ஒன்றியத்தில் பாஜக அரசு பொறுப்பேற்ற பின்னர் அம்பானியின் தொழில் பல்வேறு இடங்களில் விரிவடையத்தொடங்கியது. அரசு துறைகளை செயலிழக்க செய்து அதன்மூலம் அம்பானி பல லட்சம் கோடிகளை வருவாயாக ஈட்டினார்.

சமீபத்தில், அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி ஜியோ நிறுவனத்தின் புதிய இயக்குனராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில், அவரின் மற்றொரு மகனான ஆனந்த் அம்பானிக்கும் ராதிகா மெர்ச்சென்க்கும் வரும் ஜூலை 12 ஆம் தேதி திருமணம் நடைபெற உள்ளது.

அம்பானி மகன் திருமணத்திற்காக விமான நிலையத்தை தரம் உயர்த்திய ஒன்றிய அரசு... விமர்சிக்கும் இணையவாசிகள் !

அதனை முன்னிட்டு தற்போது பிரபலங்களை அழைத்து திருமணத்துக்கு முந்தைய விழாவை, குஜராத் மாநிலத்தின் ஜாம் நகரில் நடந்த அம்பானி திட்டமிட்டுள்ளார். இந்த விழாவுக்கு கிரிக்கெட் நட்சத்திரங்கள், திரை பிரபலங்கள், அரசியல் வாதிகள், தொழிலதிபர்கள், உலக நாடுகளின் தலைவர்கள் போன்றோரை அம்பானி அழைத்துள்ளார்.

இந்த நிலையில், இந்த திருமணத்துக்காக ஜாம் நகர் விமான நிலையம், பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை பத்து நாட்களுக்கு சர்வதேச விமான நிலையமாக ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்தில் அகமதாபாத் சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையம் டோலேரா, ராஜ்காட், சூரத் ஆகிய நான்கு சர்வதேச விமான நிலையங்கள் உள்ளது.

அங்குள்ள ஜாம் நகர் விமான நிலையத்தில் பாதுகாப்பு துறைக்கான விமான நிலையம் இயங்கி வருகிறது. இங்கு ஏர் இந்தியா உள்பட இரண்டு தனியார் விமானங்கள் சேவை நடத்தப்பட்டு வருகிறது. தற்போது அம்பானியின் நிகழ்ச்சிக்காக ஜாம் நகர் விமான நிலையம் சர்வதேச விமனநிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளதால் இதற்காக விமான நிலையத்தில் அரசு செலவில் பல புதிய வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் இந்த செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories