அரசியல்

"ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டப்பட்ட 740 MLA,MP-க்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள் - JMM கட்சி விமர்சனம் !

கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டப்பட்ட 740 எம்.எல்.ஏ,க்கள், எம்.பி-கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்கள் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விமர்சித்துள்ளது.

"ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டப்பட்ட 740 MLA,MP-க்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள் - JMM கட்சி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றியத்தில் ஆட்சியில் இருக்கும் மோடி அரசை விமர்சிப்பவர்கள் மீதான அச்சுறுதல்களும், தாக்குதல்களும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக மோடி அரசு ஆட்சி அதிகாரத்திற்கு வந்ததிலிருந்து மக்கள் விரோத நடவடிக்கை அதிகரித்துள்ளது

அதனை எதிர்ப்பவர்கள் மற்றும் அதற்கு எதிராக வலுவான போராட்டத்தில் ஈடுபடுபவர்களை வலதுசாரி அமைப்புகள் மற்றும் இந்துத்வா அமைப்புகள் அச்சுறுத்தியும் தாக்குதல் நடத்தியும் வருகின்றனர். அதோடு எதிர்க்கட்சியினர் மீது சிபிஐ மற்றும் அமலாக்க துறையினரை ஏவியும் பாஜக அடக்குமுறைக்கு உள்ளாகியுள்ளது.

மேலும், ஒன்றிய புலனாய்வு அமைப்புகள் மீதான விசாரணையை பயன்படுத்தி எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள், எம்.பிக்களை தங்கள் பக்கம் இழுக்கும் செயலையும் ஒன்றிய பாஜக அரசு செய்து வருகிறது. இந்த நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டப்பட்ட 740 எம்.எல்.ஏ,க்கள், எம்.பி-கள் பா.ஜ.க-வில் இணைந்திருக்கிறார்கள் என்று ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி விமர்சித்துள்ளது.

"ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டப்பட்ட 740 MLA,MP-க்கள் பாஜகவில் இணைந்திருக்கிறார்கள் - JMM கட்சி விமர்சனம் !

இது குறித்துப் பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, "பாஜக ஆட்சியில் யார் என்ன சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும், என்னப் படிக்க வேண்டும் எனப் பல விசித்திரமான முடிவுகளை நாடு பார்த்திருக்கிறது. பாஜக கூற்றுப்படிப் பார்த்தால், எதிர்க்கட்சியில் இருப்பவர்கள் அனைவரும் ஊழல்வாதிகள்தான்.

2014 முதல் 2024 வரை பாஜகவால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊழல்வாதி எனக் குற்றம்சாட்டப்பட்ட 740 எம்.எல்.ஏ, எம்.பி-கள் பாஜக-வில் இணைந்திருக்கிறார்கள். அவர்கள்தான் இப்போது பாஜக-வுக்கு பிடித்தமானவர்கள்" என்று கூறியுள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளரும், செய்தித் தொடர்பாளருமான சுப்ரியோ பட்டாச்சார்யா, ``2014 - 2024 வரை பா.ஜ.க ஆட்சியில் யார் என்ன சாப்பிட வேண்டும், எதை உடுத்த வேண்டும், என்னப் படிக்க வேண்டும் எனப் பல விசித்திரமான முடிவுகளை நாடு பார்த்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories