அரசியல்

தமிழ்நாடு எம்.பிக்களின் கருப்பு சட்டை குறித்து கேலி செய்த பிரதமர் : பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணித்ததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்பிக்கள் கருப்பு சட்டை நாடாளுமன்றம் சென்றதை பிரதமர் மோடி கேலி செய்து பேசியதற்கு சு.வெங்கடேசன் எம்பி பதிலடி கொடுத்துள்ளார்.

தமிழ்நாடு எம்.பிக்களின் கருப்பு சட்டை குறித்து கேலி செய்த பிரதமர் : பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இடைக்கால பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டுப் புறக்கணித்ததைக் கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கருப்பு சட்டை நாடாளுமன்றம் சென்றதை பிரதமர் மோடி கேலி செய்து பேசியதற்கு சு.வெங்கடேசன் எம்.பி பதிலடி கொடுத்துள்ளார்.

கடந்த 1-ம் தேதி நாடாளுமன்ற இடைக்கால பட்ஜெட் தொடங்கியது. அப்போது பட்ஜெட்டில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். அதில் ஒன்றும் இல்லாத விஷயங்கள் இருந்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து கண்டனம் தெரிவித்த நிலையில், தமிழ்நாடு வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் தமிழ்நாட்டுக்கு புயல் வெள்ள நிவாரணமும், வரி பகிர்வும் ஒன்றிய அரசு வஞ்சனையோடு செய்வதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் மாநிலங்களவையில் ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இடைக்கால பட்ஜெட்டின்போது தமிழ்நாடு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கருப்பு சட்டை சென்றனர்.

தமிழ்நாடு எம்.பிக்களின் கருப்பு சட்டை குறித்து கேலி செய்த பிரதமர் : பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

இதில் பிரதமர் மோடியும் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இன்று விடைபெறும் உறுப்பினர்களுக்கு பழைய மற்றும் புதிய கட்டிடத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அவர்கள் அரசியலமைப்பின் 75 ஆண்டுகளின் சாட்சியாக அங்கிருந்து திரும்புகிறார்கள்” என்றார். தொடர்ந்து தமிழ்நாடு எம்.பி-க்களின் கருப்பு சட்டை குறித்தும் விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து பிரதமர் மோடி பேசுகையில், “மாநிலங்களவைக்குள் சில உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து வந்தபோது நாம் பேஷன் ஷோ அணிவகுப்பை பார்த்தோம். நாடு செழிப்பின் புதிய உயரங்களை எட்டி வரும் நிலையில், இது நாட்டின் முன்னேற்றத்திற்கான பயணத்திற்குக் 'கருப்பு பொட்டு' மூலம் கண் திருஷ்டியை விரட்டும் முயற்சியாக பார்க்கலாம்." என்றார்.

தமிழ்நாடு எம்.பிக்களின் கருப்பு சட்டை குறித்து கேலி செய்த பிரதமர் : பதிலடி கொடுத்த சு.வெங்கடேசன் எம்.பி!

பிரதமர் மோடியின் இந்த பேச்சு தற்போது கண்டனங்களை வலுத்து வருகிறது. இதுகுறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது சமூக வலைதள பக்கத்தில், “ஓய்வு பெற இருக்கும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு நேற்று நடைபெற்ற பிரிவு உபச்சார நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் 'மாநிலங்களவைக்குள் சில உறுப்பினர்கள் கருப்பு ஆடை அணிந்து வந்தபோது நாம் பேஷன் ஷோ அணிவகுப்பை பார்த்தோம்' என பேசியிருந்தார். நாடும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. எது பேஷன் ஷோ” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மாநில உரிமைகளை புறக்கணிக்கும் ஒன்றிய அரசுக்கு கண்டித்து கருப்பு சட்டை அணிந்து வந்த எம்.பி-க்களை, ஒரு பிரதமராக இருந்து கொண்டு கேலி செய்வது அழகல்ல என பலரும் விமர்சித்து வருகின்றனர். பிரதமரின் பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories