அரசியல்

“காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் வேண்டும்...” - பொதுவெளியில் பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !

கர்நாடகா காங்கிரஸ் தலைவர்கள் தேசத் துரோகிகளாக கருத வேண்டும் என்று பாஜக தலைவர் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்.

“காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல சட்டம் வேண்டும்...” - பொதுவெளியில் பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆளும் பல்வேறு மாநிலங்களிலும், பாஜக கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களிலும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்தே காணப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள், துப்பாக்கி கலாசாரம் உள்ளிட்ட பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது. அண்மையில் கூட மகாராஷ்டிராவில் ஆளுங்கட்சியின் நிர்வாகியை, அதன் கூட்டணி கட்சியான பாஜக நிர்வாகி பொதுவெளியில் சுட்டுக்கொலை செய்தார்.

கர்நாடகாவில் கூட பாஜக மக்கள் மத்தியில் வன்மத்தை விதைத்தது. அதன் எதிரொலியாக கர்நாடகத்தில் பாஜக வீழ்த்தப்பட்டு காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. எனினும் பாஜக தொடர்ந்து மக்கள் மத்தியில் வெறுப்புணர்வையே பரப்பி வருகிறது. மக்கள் அனைவரும் அமைதியாக வாழ வேண்டும் என்று நினைக்கும் நிலையில், பாஜகவினர் ஆயுதத்தை ஏந்துமாறு பிரசாரம் செய்கின்றனர்.

கர்நாடக பாஜக மூத்தத் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா
கர்நாடக பாஜக மூத்தத் தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா

இப்படி தொடர்ந்து பல்வேறு சர்ச்சைக்குரிய விவகாரத்தை மேற்கொள்ளும் பாஜக, தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. காங்கிரஸ் தலைவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று கர்நாடக பாஜக தலைவர் சர்ச்சைக்குரிய பேச்சை பேசியுள்ளார். தற்போது இவருக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. நேற்று கர்நாடகா பாஜக புதிய தலைவர் பதவியேற்பு நிகழ்வு நடைபெற்றது. இதில் பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா கலந்துகொண்டார்.

அப்போது பேசிய அவர், “நாட்டை பிரிக்க நினைப்பவர்கள் துரோகிகள். காங்கிரஸ் இந்தியாவை பிரிக்க நினைக்கிறது. குறிப்பாக கர்நாடகா காங்கிரஸ் எம்.பி டி.கே.சுரேஷ் மற்றும் எம்.எல்.ஏ வினய் குல்கர்னி ஆகியோர் தேசத் துரோகிகள் என பிரதமர் மோடியிடம் எடுத்துக்கூற வேண்டும். தேசத்துரோகிகளை சுட்டு கொலை செய்ய சட்டம் இயற்றவேண்டும்.” என்று பேசினார்.

வினய் குல்கர்னி MLA, டி.கே.சுரேஷ் MP
வினய் குல்கர்னி MLA, டி.கே.சுரேஷ் MP

பாஜக தலைவர் ஈஸ்வரப்பாவின் பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். கர்நாடகாவின் பிரபல சமூக ஆர்வலர் கவிதா ரெட்டி தனது சமூக வலைதள பக்கத்தில், “பொதுவெளியில் கே.எஸ். ஈஸ்வரப்பாவை அடித்துக் கொல்ல வேண்டும் என்று நான் கூறியிருந்தால், பெங்களூரு காவல்துறை என்னைக் கைதுசெய்திருக்கும்.

ஆனால் டி.கே.சுரேஷ், வினய் குல்கர்னி ஆகியோர் கொல்லப்பட வேண்டும் எனப் பேசிய ஈஸ்வரப்பாமீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது. சட்டம் உண்மையில் அதிகாரத்தை அடிப்படையாகக் கொண்டது" என காட்டமாக குறிப்பிட்டிருந்தார். இந்த நிகழ்வு கர்நாடக அரசியலில் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories