அரசியல்

அடுக்கடுக்காக வைக்கப்பட்ட கேள்விகள்: திக்குமுக்காடிய ஒன்றிய அரசு!

மாநிலங்களுக்கான நிதி, சுகாதார துறை நடவடிக்கைகள், ஒன்றரை ஆண்டுகளாக நாடாளுமன்றத்திற்கு அழைக்கப்படாத குடியரசு தலைவர், மசோதா நிறைவேற்றம் தொடர்பாக பல கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டன.

அடுக்கடுக்காக வைக்கப்பட்ட கேள்விகள்: திக்குமுக்காடிய ஒன்றிய அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் அமர்வு இன்று (2.2.24) நடைபெற்றது. கேள்வி நேரத்தில், ஒன்றியத்தின் நடவடிக்கைகள் தொடர்பான பல்வேறு குறைபாடுகளை முன்வைத்தனர் எதிர்கட்சி உறுப்பினர்கள்.

காங்கிரஸ் எம்.பி. ஹிபி ஈடன்:

“ஒன்றிய சுகாதாரத் துறையால்கேரளத்திற்கு தற்போது ரூ. 154 கோடி ஒதுக்கப்படுகிறது. மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் அனைவரும், ஒன்றிய நிதி பகிர்வை சார்ந்துதான் இருக்கின்றனர். காங்கிரஸ் ஆட்சியில் 90% ஒன்றியம், 10% மாநிலம் என பகிரப்பட்ட நிதி, இந்த ஆட்சியில் 60 -40 ஆக உள்ளது. இது தொடர்பாக கடிதங்கள் அனுப்பட்டுள்ளன. எனினும் நிதி ஒதுக்கப்படவில்லை.”

காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய்:

”கடந்த ஜூலை 2022 அன்று குடியரசு தலைவராக பதிவியேற்றார் திரெளபதி முர்மு. அதன் பிறகு, புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்டது. ஆனால் அவருக்கு நாடாளுமன்றத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்நிலையில், ’புதிய நாடாளுமன்றத்தில் நுழைவது இதுவே முதல் முறை என்று குடியரசு தலைவர் திரௌபதி மூர்மு, கடந்த ஜனவரி 31 அன்று தனது உரையில் குறிப்பிட்டார். இதுவரை குடியரசு தலைவரை நாடாளுமன்றத்திற்கு அழைக்காதது ஏன்?’”

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே:

“சமூக நீதிக்கான பாஜகவின் நிலைப்பாட்டை தொடர, அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவை பதவிநீக்கம் செய்யவேண்டும்.”

(டிசம்பர் 2023-ல், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, வருணாசிரம கருத்தை X தளத்தில் பதிவிட்டு, பின் நீக்கியது குறிப்பிடத்தக்கது.)

தி.மு.க மக்களவை தலைவர் டி.ஆர்.பாலு:

“மழை வெள்ளம் காரணமாக தமிழகத்தில் சுமார் 2 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 100 ஆண்டுகளில் இல்லாத அளவு மழை பொழிந்தது என வானியலாளர்கள் தெரிவித்துள்ளனர். ஒன்றியத்தின் குழுக்கள் நேரில் ஆய்வு மேற்கொண்டன. எனினும் நிவாரணத்துக்கு கேட்கப்பட்ட ரூ. 37 ஆயிரம் கோடியை இன்று ஒன்றிய அரசு தரவில்லை.”

banner

Related Stories

Related Stories