அரசியல்

சண்டிகர் தேர்தல் : “இது திருட்டுத்தனம்... ஊடகங்கள் முன்பே களவாடிய பாஜக...” - ஆம் ஆத்மி கண்டனம் !

சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக ஏமாற்றி வெற்றி பெற்றதாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

சண்டிகர் தேர்தல் : “இது திருட்டுத்தனம்... ஊடகங்கள் முன்பே களவாடிய பாஜக...” - ஆம் ஆத்மி கண்டனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின. அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள், யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் என்பவர் போட்டியிட்டார்..

அதேபோல பாஜக சார்பில், மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்டார். இந்த மேயர் தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு ஆதரவாக கருத்துகள் வெளியானதையடுத்து, தோல்வி பயத்தில் 2 முறை மேயர் தேர்தலை ஒத்திவைத்தது. இதையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றம் வரை சென்ற நிலையில், இன்று மேயர் தேர்தல் நடைபெற்றது.

சண்டிகர் தேர்தல் : “இது திருட்டுத்தனம்... ஊடகங்கள் முன்பே களவாடிய பாஜக...” - ஆம் ஆத்மி கண்டனம் !

அதன்படி இன்று நடைபெற்ற இந்த தேர்தலில் 36 உறுப்பினர்களில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு 20 வாக்குகளும், பாஜகவுக்கு 16 வாக்குகளும் கிடைத்தன. இதனால் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெரும் என்று எதிர்பாக்கப்பட்டது. ஆனால், மொத்தம் பதிவான 36 வாக்குகள் பதிவான நிலையில், அதில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கூட்டணிக்கு வந்த 8 வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார்.

இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு 12 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. எனவே பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார். ஆனால், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட 8 வாக்குகளை தேர்தல் ஆணையர் திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையர் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டார் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்து வருகின்றது.

இந்த நிலையில் தோல்வி பயத்தில் பாஜக பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு இந்த தேர்தலில் வெற்றி பெற்றதாக காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்து வருகிறது. இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சி, “சண்டிகர் மேயர் தேர்தலில் ஜனநாயகத்தை கொன்றிருக்கிறது பாஜக. இந்தியா கூட்டணி பெரும்பான்மை பெற்று வெற்றி பெறவிருந்த நிலையில், தில்லுமுல்லு செய்து பாஜக ஜெயித்திருக்கிறது. ஒரு மேயர் தேர்தலுக்கே பாஜக இத்தகைய எல்லைக்கு செல்லும்போது, மக்களவை தேர்தலில் என்னவெல்லாம் செய்யும்?” என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், “சண்டிகர் மேயர் தேர்தலில் வெளிப்பட்டிருக்கும் நேர்மையின்மை கவலைக்குரிய விஷயம். மேயர் தேர்தலுக்கு இந்தளவுக்கு இவர்கள் கீழ்த்தரமாக நடப்பார்கள் எனில், நாட்டின் தேர்தல்களில் எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டார்கள். சண்டிகரில் ஜனநாயகத்தை கொல்ல பாஜக ஜனவரி 30-ம் தேதியை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

சண்டிகர் தேர்தல் : “இது திருட்டுத்தனம்... ஊடகங்கள் முன்பே களவாடிய பாஜக...” - ஆம் ஆத்மி கண்டனம் !

ஆம் ஆத்மி கட்சி எம்.பி. ராகவ் சதா, “சண்டிகர் மேயர் தேர்தலில் பாஜக முறைகேடு செய்து வெற்றி பெற்றிருப்பது, ஒரு கூட்டணிக்கோ அல்லது ஒரு கட்சிக்கோ ஏற்பட்ட பின்னடைவல்ல; இந்திய ஜனநாயகத்துக்கு நேர்ந்த பின்னடைவு. மேயர் தேர்தலுக்கே இந்தளவுக்கு கீழ்த்தரமாக நடக்கும் பாஜக, 2024ம் ஆண்டு தேர்தலில் வெல்ல எந்த எல்லைக்கும் செல்லக் கூடும்.” என்று தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி தலைவர் சவுரப் பரத்வாஜ், “இது திருட்டுத்தனம். சண்டிகரில் 36 கவுன்சிலர் சீட்டுகள் உள்ளன. அதில் 14 சீட்டுகள் பாஜக. 13 சீட்டுகள் ஆம் ஆத்மி. 7 சீட்டுகள் காங்கிரஸ். ஆம் ஆத்மிக்கு மொத்தமாக 20 சீட்டுகள் உள்ளன. பாஜக மீண்டும் அம்பலமாகி உள்ளது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த பஞ்சாப் முதலமைச்சர் பகவத் மான், “ஜனநாயகத்தின் கறுப்பு நாளாக இன்றைய நாள் நினைவுகூரப்படும். துயரம் என்னவெனில் இதே மாதத்தில்தான் நாம் குடியரசு தினமும் கொண்டாடினோம். சண்டிகர் மேயர் தேர்தலில், ஊடகங்களின் முன்னிலையிலேயே பாஜக களவாடியிருக்கிறது. இதைத்தான் அவர்கள் மத்தியப்பிரதேசம், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா, வடகிழக்கு மாநிலங்களிலும் செய்தார்கள்.” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories